அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் மதுரையில் எம்ஜியார் மற்றும் செயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த விழா ‘செயலலிதா கோயில் திறப்பு விழா’ என்ற தலைப்பிலேயே பேசப்பட்டது. 17,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் செயலலிதா பேரவை மற்றும் அம்மா அறக்கட்டளை சார்பாக செயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவில் மதுரை திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் செயலலிதா மற்றும் எம்ஜிஆருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் சுமார் 400 கிலோ எடையில் முழு உருவ வெண்கல சிலையாக நிறுவப்பட்டு உள்ளன. இன்று முன்னெடுக்கப்பட்ட இந்தக் கோவில் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். கோயில் திறப்புவிழாவிற்கு மதுரை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, விமான நிலையத்தில் இருந்து செயலலிதா கோவில் செல்லும் வழிநெடுகிலும் செயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.