Show all

இலங்கை கடற்படை முகாமில் 60 வீரர்களுக்கு கொரோனா!

60 வீரர்களுக்கு கொரோனா. 4,000 கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் கடற்படை நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகரான வெலிசராவில் உள்ள கடற்படை முகாமில் 60 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து, அந்த முகாம் மூடப்பட்டது. 

இதையடுத்து விடுப்பு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு 4,000 கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் கடற்படை நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பணி காரணமாக மட்டுமே தனிமைப் படுத்தப்பட்ட முகாமில் இருந்து வீரர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 2 நாட்களில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.