ஒட்டு மொத்த இந்தியாவில் கொரோனாவிற்கு இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் படிப்படியாக ஆறாவது இடத்திற்கு இறங்கியுள்ள நிலையில் குணமளிப்பதில் தமிழகம் முதலிடத்திலும், இறப்புச் சோகத்தில் கடைசி இடத்திலும் அமைந்து தமிழகத்தின் மருத்துவத்துறை சாதனை படைத்து வருகிறது. 13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் 64 பேர்கள் கூடியுள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 60 பேர்கள் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் செங்கல்பட்டு மருத்துவமனையில் 13 பேர்களும், திருவாரூரில் 12 பேர்களும், தஞ்சையில் 10 பேர்களும், சென்னையில் 9 பேர்களும், மதுரையில் 8 பேர்களும், கன்னியாகுமரியில் பேர்களும், குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்திலேயே இதுவரை அதிகபட்சமாக கோவை தொழிலாளர் காப்புறுதி மருத்துவமனையில் 185 பேர்கள் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர், அதற்கு அடுத்தபடியாக கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 144 பேர்கள் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 6621 பேர்களுக்கு கொரோனா நுண்ணுயிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 79586 பேர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. அதில் 1855 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 87605 ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இன்று ஒரு நாளில் மட்டும் 7485 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இன்று 39 ஆண்களுக்கும், 25 பெண்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போதைய நிலையில் 838 பேர்கள் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டார்கள். இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. நடுவண் நலங்குத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 26917 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1975 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 5914 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 826 ஆக உயர்ந்துள்ளது. மாநில அளவில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 7628 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குஜராத்தில் 3071 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் 2625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தமிழக நிலவரம்: ஒட்டு மொத்த இந்தியாவில் கொரோனா பாதிப்பில் ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகம், குணமளிப்பதில் முதல் இடத்தில் இருக்கிறது.
பாதிப்பு 1885
குணமடைந்தோர்கள் 1020 விழுக்காடு 54
இறப்பு 24 விழுக்காடு 1.27
கொரோனா இந்திய நிலவரம்:
பாதிப்பு 26917
குணமடைந்தோர்கள் 5914 விழுக்காடு 22
இறப்பு 826 விழுக்காடு 3
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



