ஐந்தாவது தலைமுறை இணையச் சேவை தரவு வழங்கும் உலகின் முதல் நாடாக பெருமை பெறுகிறது தென் கொரியா. 22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்றிரவே, தென்கொரியா முழுவதும் ஐந்தாவது தலைமுறை இணையத் தரவு சேவை தொடங்கி வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எஸ்.கே.டெலிகாம், கே.டி., எல்ஜி யூபிளஸ் ஆகிய நிறுவனங்கள் இச்சேவையை வழங்குகின்றன. தென்கொரியா அவசர அவசரமாக இரவில் இச்சேவையை தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒலிம்பிக் பனிச்சறுக்கில் தங்கம் வென்ற வீராங்கனையான கிம் யுனா மற்றும் எக்சோ பேண்ட் இசைக்குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் உலகின் முதல ஐந்தாவது தலைமுறை இணையத் தரவுச் சேவை வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என எஸ்.கே.டெலிகாம் கூறியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,113.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



