கடந்த ஐந்தாண்டில் ஒரு ஆணியும் பிடுங்காத பாஜக ஆட்சியால், கட்சி அணையத் துடித்துக் கொண்டிருக்கிறது! அதை தூக்கி நிறுத்த 'எதிரிகள் தேசத்துரோகிகள்' கோட்பாட்டை கட்டமைத்து வருகிறது நடப்பு மோடி-அமித்சா பாஜக. இந்தநிலையில் பாஜகவினால் புறமொதுக்கப்பட்ட மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தன் வலைப்பக்கத்தில் எழுதிய பதிவொன்றில் 'முதலில் தேசம், அடுத்து கட்சி, தன்னலம் கடைசி' என்ற தலைப்பில் பாஜக வளர்ந்த விதத்தைப் பட்டியல் இடுகிறார். பாஜக தோற்றபிறகு மோடி படித்து விளங்கிக் கொள்வதற்காகவோ! 22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காந்தி நகர் தொகுதியில் 6 முறை வெற்றி கண்ட அத்வானி இம்முறை புறக்கணிக்கப்பட்டு அதே தொகுதிக்கு அமித்சாவை வேட்பாளராக பாஜக அறிவித்தது. இதனையடுத்து பாஜகவில் ஒரு தரப்பினருக்கு மோடி மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. மோடியின் பாஜக ஆட்சியில் தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் தாக்கப்படுவதும், வழக்குகளைச் சந்திப்பதுமாக இருந்து வருகின்றனர். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட பாலகோட் தாக்குதல் பற்றி விமர்சன பூர்வமாக யார் பேசினாலும் அவர்களை தேச விரோதிகள் என்று வர்ணிக்கும் போக்கு பாஜகவிடத்தில் நீடித்தது. ரபேல் விவகாரத்தில் கடுமையான கேள்விகளை எதிர்க்கட்சிகளும் பத்திரிகையும் கேள்வி எழுப்பிய போதும் இதே தேச துரோக பேச்சு எழுந்தது. எழுத்தாளர் கல்புர்கி, கர்நாடகா பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்குகள், மொகமது அக்லக் பசு இறைச்சி வைத்திருந்ததாக கொலை செய்யப்பட்டது, தொடர்ந்து பசுக்குண்டர்கள் ஒரு பிரிவினரை நோக்கி தாக்குவதும் தொடர பாஜக ஆட்சி மீது 'வெறுப்பரசியல்' செய்வதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் மூத்த தலைவர் அத்வானியே பாஜகவின் சாராம்சக் கொள்கைகளை விளக்கி தன் பதிவில் எழுதியுள்ளார். அதில், குடிஅரசு மரபுகளை கட்சிக்குள்ளும், பரந்துபட்ட தேசிய மட்டத்திலும் பாதுகாப்பது என்பது பாஜகவின் பெருமைக்குரிய அடையாளமாகும். இந்தியக் குடிஅரசின் சாராம்சம் பன்முகத்தன்மையை மதித்தல், பேச்சு, கருத்து உரிமை ஆகும். பாஜக தொடங்கியது முதல் நம்முடன் அரசியல் ரீதியாக உடன்படாதவர்களை நாம் விரோதிகளாகப் பார்த்ததில்லை. அதே போல் இந்திய தேசியம் என்ற நம் கருத்தாக்கத்தில் ஒரு போதும் அரசியல் ரீதியாக நம்முடன் முரண்படுபவர்களை நாம் தேச விரோதிகள் என்று கருதியதில்லை. பாஜக எப்போதும் ஒவ்வொரு குடிமகனின் சொந்த மற்றும் அரசியல் சுதந்திரத் தெரிவு என்பதை கடப்பாடுடன் பாஜக மதித்தது. விடுதலை, குடிஅரசு, நேர்மை, நியாயம், ஊடக சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாப்பதில் பாஜக எப்போதும் முன்னிலையில் இருந்துள்ளது என்று எழுதியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,113.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.