Show all

ஐந்தாவது தலைமுறை செல்பேசி நடுத்தட்டு மக்களுக்கு எட்டக்கனியாகுமா! இல்லை குறைக்கப்படுமா விலை?

ஏறத்தாழ ஒரு இலட்சம் விலையில், ஐந்தாவது தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட செல்பேசிகளை அறிமுகம் செய்தது சாம்ஸங்.

25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 5ஜி எனப்படும் 5ம் தலைமுறை செல்பேசிகள் விற்பனை தென்கொரியாவில் தொடங்கியுள்ளன.

3 பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைந்து ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளன. இதையடுத்து சாம்சங் நிறுவனமும் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட செல்பேசிகள் விற்பனையைத் தொடங்கி உள்ளது.

இதற்காக தலைநகர் சியோலில் உள்ள சாம்சங் நிறுவன விற்பனை மையத்தின் முன் அதிகாலை முதலே வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். 'கேலக்ஸி எஸ்10 5ஜி' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த பேசியில் 4 பின்புற படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்திய மதிப்பில் சுமார் 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எஸ் 10 செல்பேசிகள் நான்காம் தலைமுறை பேசிகளை விட 25 முதல் 30 விழுக்காடு வரை விலை அதிகம் என்று வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,116.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.