Show all

முதுகெலும்பு இல்லாத நபரையா இத்தனை நாள் தாங்கி பிடித்திருந்தோம்! அய்யாக்கண்ணு பல்டியால் உழவர்கள் வேதனை

தேர்தல் அறிக்கையில் ஏதாவது அறிவிப்பதாக அமித்சா சொல்லி விட்டாராம். டெல்லிக்குச் சென்று தமிழன் மானத்தை வாங்கிய அய்யாக்கண்ணு இனி அமைதி காக்கப் போகிறாராம். அடப்பாவி சண்டாளா! இதற்காகத்தான் அத்தனை நாள் எங்களை டெல்லியில் வைத்து அசிங்;கப் படுத்தினாயா? என்கின்றது வேளாண் சமுதாயம்.

25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடியை எதிர்த்து அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதாகவும் அதுமட்டுமின்றி தன்னுடன் நூற்றுக்கணக்கான உழவர்களும் அதே தொகுதியில் போட்டியிட போவதாகவும் அண்;மையில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு அறிவித்திருந்தார்.

இதனால் நூறுக்கும் மேற்பட்டோர் மோடியின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டால் அங்கு வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் திடீர் பல்டியாக வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக கூறியிருந்த நிலையில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு நேற்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்சாவை சந்தித்தார்.

அமித்சாவுடனான இந்த சந்திப்பின்போது சந்திப்பில் பியூஷ் கோயல் மற்றும் அமைச்சர் தங்கமணியும் கலந்து கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு பாஜக தேர்தல் அறிக்கையில் வேளாண்மைக்கு ஏதாவது போட்டுக்கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். ஆதனால் வாரணாசியில் போட்டியில்லை. 111 உழவர்கள் மோடிக்கு எதிராக போட்டியிடமாட்டோம் என்று கூறியுள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,116. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.