Show all

உலகின் மிக உயர்ந்த மதிப்பு கொண்ட நாணயம் ஆகப்போகிறது கைலாசா நாட்டு டாலர்! ஒரு கைலாசா டாலர் ரூ58,860

ஒரு கைலாசா டாலர் இன்றைய மதிப்பு இந்திய ரூபாயில் 58,859 ஆக இருக்கும். 11.66 கிராம் எடை கொண்ட தங்கத்தை வைத்து ஒரு கைலாசா டாலர் அச்சிடப்படும் என்கிறார் நித்தியானந்தா.

06,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சர்ச்சை சாமியாராக இந்தியாவில் பெயர்விளங்கி வருகிற நித்தியானந்தா, தனது கைலாசா நாட்டிற்கான தனி கட்டுப்பாட்டு வங்கியைத் தொடங்கி தனது நாட்டிற்கான தனி நாணயத்தையும் அறிமுகப்படுத்திவிட்டார் என்று செய்தி வெளியாகியிருக்கிறது. 

கைலாசா நாட்டிற்காக அவர் தொடங்கியுள்ள வங்கி கைலாசா நாட்டின் பொருளாதார கொள்கைகளை தீர்மானிக்குமாம். அதோடு கைலாசியன் டாலரையும் அச்சிடப் போவதாகச் சொல்லி இருக்கிறார் நித்தியானந்தா. அவர் அச்சிடும் நாணயத்தை சர்வதேச நாடுகள் ஏற்குமா என்ற ஆய்வுக்கே இடம் இல்லை. ஏனென்;றால் அவர் கைலாசா டாலரை தங்கத்திலேயே வெளியிடப் போகின்றார். 
ஒரு டாலர் ஒரு டோலா (11.66 கிராம்) எடை கொண்டதாக இருக்குமாம். இதை 25 வடிவங்களில், ஹிந்துத்துவாவைப் பிரதிபலிக்கும் விதத்தில் அச்சிடப்போவதாகச் சொல்லி இருக்கிறார். ஹிந்து மதத்தில் தங்கம் புனிதமான ஒன்று எனவும் சொல்லி இருக்கிறார் நித்தியானந்தா. ஆக தங்கத்தை குறி வைத்து தான் மனிதர் தன் செலாவணியைக் களம் இறக்குகிறார். 

மனித சமூகத்தில்- தங்கத்தை கட்டுப்பாட்டு வங்கிகளில் இருப்பு வைத்துக் கொண்டு அதன் மதிப்புக்கு கடந்த சில நூற்றாண்டுகளாகத் தான் அமெரிக்க டாலர், இந்திய ரூபாய் எல்லாம் புழக்கத்தில் இருக்கின்றன. 

இவைகள் வருவதற்கு முன், தங்கம், வெள்ளி போன்ற உலோகத்தை நம்பித் தான் வர்த்தகம் செய்தார்கள். அரசாங்கங்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் தான், தங்கள் நாணயங்களை அச்சிட்டார்கள். இன்று வரை தங்கம் ஒரு அச்சிடப்படாத செலாவணி என்கிற தகுதியில் நிலைத்து இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு யாரோ ஒரு நபர், 22 கேரட் சுத்தமான தங்க கட்டியை வைத்து, பணம் கேட்டால் நாம் தருவோமா மாட்டோமா? 

இந்த அடிப்படையில்தான் நித்தியானந்தாவும் அறிவாளித் தனமாக தன்; நாட்டு நாணயத் தயாரிப்புக்கு நேரடியாக தங்கத்தையே பயன்படுத்த இருக்கிறார் போலிருக்கிறது.

ஒரு கைலாசா டாலர் இன்றைய மதிப்பு இந்திய ரூபாயில் 58,859 ஆக இருக்கும். 11.66 கிராம் எடை கொண்ட தங்கத்தை வைத்து ஒரு கைலாசா டாலர் அச்சிடப்படும் என்கிறார் நித்தியானந்தா. சரி. இந்த 11.66 கிராம் தங்கம் 22 கேரட் தரம் கொண்டது என ஒரு எடுத்துக்காட்டுக்கு வைத்துக் கொள்வோம். சென்னையில், இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 5,048 ரூபாய். ஆக கைலாசா நாட்டின் 11.66 கிராம் எடை கொண்ட ஒரு கைலாசா டாலரின் மதிப்பு 58,860 இந்திய ரூபாய். இப்படி எந்த நாட்டு செலாவணியையும், தங்கத்துடன் உடனடியாக ஒப்பிட்டு விடலாம் மதிப்பீட்டுச் சிக்கல் இல்லை. பரிமாற்றம் எளிதாக நடக்கும் இப்போது கைலாசா நாட்டு டாலரை கையில் வைத்திருக்கும் ஒருவர், அதை உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று தனக்கு வேண்டிய பொருளை வாங்கிக் கொள்ளலாம். 

கைலாசா நாட்டைச் சேர்ந்தவர்கள், கைலாசா டாலரை ஒரு செலாவணியாகப் பார்ப்பார்கள். ஆனால் மற்ற நாடுகளில் இருப்பவர்கள் கைலாசா டாலரில் இருக்கும் தங்கத்தைப் பார்ப்பார்கள். அது தான் தங்கத்தின் பலம். 

கைலாசா நாட்டு நாணயத்திற்காக அங்கீகாரச் சிக்கலே இல்லை இப்படி தங்க செலாவணியை விற்று அமெரிக்க டாலரையே வாங்க முடியும் என்றால், மற்ற நாட்டு செலாவணிகளையும் இதே போல எளிதாக வாங்க முடியும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.