இதுவரை சரக்குசேவைவரி, வருமானவரி, சுங்கவரி என்ற வரிகளில் இருந்தெல்லாம் வசூலித்த தொகையிலிருந்தே, கொரோனா ஊரடங்கு பாதிப்பிற்கு எதுவும் செய்யாத- பேரிடர் நிதியிலும் கொரோனா ஊரடங்கு பாதிப்பிற்கு எதுவும் செய்யாத- நடுவண் அரசுக்கு, இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகளுக்காக, என்று ‘பிரிக்ஸ்’ நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. 01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்த ஆண்டு நடுவே, ஐ.நா அவை வெளியிட்ட மக்கள் தொகை கணக்குப்படி இந்தியாவின் மக்கள் தொகை 136.64 கோடி. இந்தியாவின் மொத்தக் கடன் 82,03,253 கோடி ரூபாய் என்றால், ஒவ்வொரு இந்தியக் குடிமகன் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது? ஒரு கணக்கை முன்னெடுத்தால் கிடைக்கும் விடை:- ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் தோராயமாக இருக்கும் கடன் தொகை 60,034 ரூபாய். தற்போதைய கொரோனா ஊரடங்கால் இந்தியத் தனிமனிதனின் சொந்தக் கடன் எவ்வளவு கூடியிருக்கின்றன என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள கொரோனா முதலில் முடிவுக்கு வரவேண்டும் அப்புறம் ஒரு ஆறுமாதம் கழித்தே இந்தியாவின் இந்த ஊரடங்கால் ஒவ்வொரு தனிமனிதனும் எவ்வளவு கடன் பட்டிருக்கிறான் என்பது தெரியவரும். ஏனென்றால் அப்போதுதான் கடன்கொடுத்தவன் எல்லாம் கடனை வசூலிக்கும் வேலையைத் தொடங்குவார்கள். இதுவரை சரக்குசேவைவரி, வருமானவரி, சுங்கவரி என்ற வரிகளில் இருந்தெல்லாம் வசூலித்த தொகையிலிருந்தே, கொரோனா ஊரடங்கு பாதிப்பிற்கு எதுவும் செய்யாத- பேரிடர் நிதியிலும் கொரோனா ஊரடங்கு பாதிப்பிற்கு எதுவும் செய்யாத- நடுவண் அரசுக்கு, இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகளுக்காக, என்று ‘பிரிக்ஸ்’ நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய, பிரிக்ஸ் நாடுகள் இணைந்து, புதிய வளர்ச்சி வங்கியைத் தொடங்கின. சீனாவின் ஷாங்காய் நகரில் செயல்பட்டு வரும் இவ்வங்கியின் தலைவராக, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர், கே.வி.காமத் நியமிக்கப்பட்டார். உறுப்பு நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் வளர்ச்சி திட்டத்திற்காக, பிரிக்ஸ் வங்கி கடன் வழங்கி வருகிறது. இவ்வங்கி, இந்தியாவின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கிஉள்ளது. இது குறித்து, இவ்வங்கியின் துணை தலைவர், ஜியான் ஜு கூறியதாவது: கொரோனா போன்ற பேரிடர் பாதிப்பு காலங்களில், அவசர உதவி கடன் திட்டத்தின் கீழ், உறுப்பு நாடுகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த வகையில், இந்தியாவுக்கு, கொரோனா பரவல் தடுப்பு, நிவாரணம், சமூக, பொருளாதார திட்டங்களுக்கு, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்தக் கடன் தொகையால், ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் தோராயமாக இருக்கும் கடன் தொகை 60,034 ரூபாய் உடன், ரூபாய் 55 கூடி 60089 ஆக மாறப் போகிறது. எத்தனையோ தாங்கிக் கொண்டிருக்கிற இந்தியக் குடிமகன் இந்த ரூபாய் 55கூடுதல் கடனையா சமாளிக்க மாட்டான். சமாளிப்போம்!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



