Show all

விஜய் மல்லையா வஞ்சப்புகழ்ச்சி வாழ்த்து! நடுவண் அரசின் கொரோனா நிவாரணப் பொதியை 20இலட்சம் கோடிக்கு

அரசாங்கம் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் அச்சிடலாம் என்ற ஒற்றை வரியில், ஆயிரம் செய்திகளைப் பொதித்து, அவர் நடுவண் அரசுக்கு நையாண்டிப் பொதியையை அளித்திருக்கிறார் விஜய் மல்லையா.

01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் அரசின் கோவிட் 19 நிவாரண பொதியைக் குறிப்பிட்டு அதற்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்ட விஜய் மல்லையா, “அரசாங்கம் எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை அச்சிடலாம். ஆனால் முழு கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ள என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏன்? என்று கேட்டு தனது வாழ்த்தை வஞ்சப்புகழ்ச்சியாக்கியிருக்கிறார்.

அரசாங்கம் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் அச்சிடலாம் என்ற ஒற்றை வரியில், ஆயிரம் செய்திகளைப் பொதித்து, அவர் நடுவண் அரசுக்கு நையாண்டிப் பொதியையை அளித்திருக்கிறார். 

நீண்ட காலமாகவே நிபந்தனையில்லாமல் திரும்பப் பெறுவது என்றால் தனது கடனை முழுமையாக அடைப்பதாக பலமுறை தெரிவித்து வருகிறார் விஜய் மல்லையா. இதன் மூலம் கடன் வசூல்முறையில் குறை இருப்பதை சுட்டிக்காட்ட முனைகிறார் விஜய் மல்லையா.

கையில் இல்லாத பணமான இருபது இலட்சம் கோடியை, வெற்றுத்தாளாக அச்சிட்டு கொடுக்கப் போகிறதா நடுவண் அரசு என்று, நடுவண் அரசின் கோவிட் 19 நிவாரண பொதியைக் குறிப்பிட்டு- அரசாங்கம் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் அச்சிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.