கொரோனா தொற்று உள்ளதா என்று கண்டறிவதற்கே கிழமைகள் கணக்கில்; தேவைப்படுவதால், கொரோனா இருக்கிறதா என்கிற ஐயப்பாட்டுடன் நீண்ட காலம் தனிமைப் படுத்தப்;படுவதால் பற்பல விபரீதங்கள் நிகழ்ந்து விடுகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவில் 5 நிமிடங்களில் கொரோனா கண்டறிய புதிய கருவி என்பது மிகுந்த ஆறுதலான செய்தியாகும். 15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிவது சிக்கலான பரிசோதனையாகும். பலஇலட்சம் ரூபாய் முதலீட்டில் சோதனைக் கருவி வாங்கும் தனியார் ஆய்வகங்கள் ரூ.4500 கட்டணமாக வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரை, கொரோனா இருப்பதை உள்ளூர் ஆய்வுக்கூடத்தில் தெரியவந்தாலும், தொற்றை உறுதிசெய்வது புனே ஆய்வகம்தான். தமிழகத்தில் சென்னை, தேனி, நெல்லை உள்ளிட்ட சில இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வகம் ஒன்று ஐந்து நிமிடங்களுக்குள் கொரோனா கொண்டிருக்கிறார்களா என்று கண்டறியும் எளிய சோதனை கருவியை வெளியிட்டுள்ளது. 5 நிமிடங்களில் கொரோனா நுண்ணுயிரி இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து விரைவு சோதனை மூலம் கண்டறியப்படும். அபாட் லேபாரட்டரீஸ் உருவாக்கிய இந்த விரைவு சோதனை கருவியை பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து துறை ஒப்புதல் அளித்துள்ளது. தொற்று இருந்தால் 5 நிமிடங்களிலும் இல்லாவிட்டால் 13 நிமிடங்களிலும் முடிவுகளை கொடுக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு சிறிய டோஸ்டரின் அளவு மற்றும் மூலக்கூறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த சோதனை கருவி 13 நிமிடங்களுக்குள் எதிர்மறையான முடிவுகளைக் காட்டுகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான பரந்த அளவிலான நோயறிதல் தீர்வுகளை இந்த சோதனை மேம்படுத்தும் என்று அபாட் தலைவரும், தலைமை இயக்க அதிகாரியுமான ராபர்ட் ஃபோர்டு கூறினார். இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறும் போது, உலகில் எங்கும் இல்லாத வகையில் நாள்தோறும் ஒருலட்சம் பேருக்கு கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறோம். அடுத்த இரு கிழமைகளில் இது அதிகரித்து, உலகில் அதிகமான மருத்துவப் பரிசோதனை செய்யும் நாடாக நாங்கள் மாறுவோம் என கூறினார்.
இதனால், நோயாளி மூக்கின் உட்பகுதியிலும் தொண்டையின் உட்பகுதியிலும் இரண்டு இணை மாதிரிகள் எடுக்கப்படும். ஒன்று, அங்கேயே பரிசோதிக்கப்படும். இன்னொன்று, புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிரியியல் நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



