Show all

470 கோடியில் ஒரு பெண்ணாக சாதனை! 9நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்

ஒன்பது நிமிடத்தில் 4 ஆண் மற்றும் 2 பெண் என மொத்தம் 6 குழந்தைகள் பெற்றெடுத்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலப் பெண் ஒருவர் சாதனை பெற்றுள்ளார்.

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாதனைப் பெண் தெல்மா சயாகா! நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்துக்காக அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கூஸ்டன் நகரை சேர்ந்த பெண்ணான தெல்மா சயாகாவிற்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 4 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் அடங்குவர். குழந்தைகள் தலா 480 கிராம் முதல் 950 கிராம் வரை எடையுடன் உள்ளனர்

இந்தக் குழந்தைகள் காலை 4.50 மணி முதல் 4.59 மணிக்குள் அதாவது 9 நிமிட இடைவெளியில் பிறந்தன. குழந்தைகளும், தாயும் நல்ல நிலையில் உள்ளனர். குழந்தைகள் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்

470 கோடியில் ஒரு பெண்ணுக்கு தான் இது போன்று குழந்தை பிறக்குமாம். அந்த சாதனையை தெல்மா முறியடித்து விட்டார்.

இவர் தனது பெண் குழந்தைகளுக்கு சினா, சீரியல் என பெயரிட்டுள்ளார். 4 ஆண் குழந்தைகளுக்கு பெயர் தேடிக்கொண்டிருக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,113.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.