'ஏன் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்' என்கிற புத்தகத்தை பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம்: 'நீட்டைக்கொண்டு வந்தவர்கள் நாங்கள்; அதனால் நீட்டை நீக்கும் அறிவிப்பு பாஜக தேர்தல் அறிக்கையில் இருக்காது' போன்ற பாஜக ஆட்சியின் ஐந்தாண்டு சாதனைகளை விளக்கிப் பேசினார். 21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், 'ஏன் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்' என்கிற புத்தகத்தை பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல கணேசன் கூறியதாவது: தேர்தல் அறிக்கை ஏனோ தானோ என்று தயாரிக்க கூடாது அது தயார் செய்யும் பொழுது பல நிபுணர்கள் வைத்து தயாரிக்க வேண்டும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால் எதையாவது சொல்லி முதலில் வென்று விடுவோம் என்று தயாரித்ததுபோல் உள்ளது. காங்கிரஸ் சொல்லி இருக்கும் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றுவது சாத்தியம் இல்லாத ஒன்று. ரபேல் புத்தகம் அவ்வளவு விற்பனை ஆனதற்கு காரணம் அதில் என்னதான் இருக்கு என்று பார்பதற்காகவே பலர் வாங்கிருப்பார்கள். நான் இன்னும் ரபேல் புத்தகத்தை படிக்கவில்லை. பாஜகவுக்கு ஆதரவு அளிக்காதீர்கள் என எழுத்தாளர்கள், கலைஞர்கள், இயக்குநர்கள் ஏன் சொல்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை. இவர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கிறது. இவர்களை மக்கள் மதிக்க போவது இல்லை. உலகை காத்து இரட்சிக்கும் பகவான் கிருஷ்ணர் குறித்த விமர்சனம் தொடர்பாக கி.வீரமணி கைது செய்யப்பட வேண்டும். ஆனால் அரசு அதை செய்யாது. வீரமணி போன்ற பெரியவரிடமிருந்து நான் இந்த கருத்தை எதிர்பார்க்கவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்ததே நாங்கள் தான். எங்களுடைய தேர்தல் அறிக்கையில் அதனை ரத்து செய்வதாக எந்த அறிவிப்பும் வராது' இவ்வாறு அவர் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,112.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.