Show all

ஐந்தே நாட்களில், 400 சடலங்கள் கண்டெடுப்பு! பொலிவியா நாட்டின் தெருக்களிலும், வீடுகளிலும் இருந்து

கொரோனா தாண்டவமாடி வரும் பொலிவியாவில், கடந்த 5 நாட்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் வீடுகளிலிருந்தும், தெருக்களிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

08,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தாண்டவமாடி வரும் பொலிவியாவில், கடந்த 5 நாட்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் வீடுகளிலிருந்தும், தெருக்களிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இதுவரை 62 ஆயிரத்து 357 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 2,273 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். அங்கு குறைவான அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், கொரோனா பாதிப்பு அதிகளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் முதன்மை நகரங்களில், கடந்த 5 நாட்களில் தெருக்கள், வீடுகளில் இருந்து மட்டும் 400க்கும் அதிகமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்களில் குறைந்தது 85 விழுக்காட்டு பேர்கள் கொரோனாவால் இறந்திருக்கலாம் என அந்நாட்டு நலங்குத் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் பரிசோதனை முடிவுகள் வரும் வரை, இவை சந்தேக மரணமாகவே எடுத்துக் கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பொலிவியா அலுவல்முறையில் பொலிவியப் பன்னாட்டு மாநிலம் என்று அழைக்கப்படுகிறது. இது தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பல்வேறு இனக்குழுவினர் வாழும் மிகச்சிறிய  நாடாகும். இதன் அனைத்து எல்லைகளும் நிலத்தால் சூழப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கில் பிரேசில் நாடும், தென்கிழக்கில் பரகுவேயும் தெற்கில் அர்ஜென்டீனாவும், தென்மேற்கில் சிலியும் வடமேற்கே பெருவும் எல்லை நாடுகளாக அமைந்துள்ளன. 

பொலிவியாவின் மக்கள் தொகை தோராயமாக ஒரு கோடியாகும் ஐரோப்பியர், ஆசியர், ஆப்பிரிக்கர், அமெரிக்க முதற் குடிகள், மெச்டிசோ போன்ற பல் இனத்தவர் வாழும் நாடு பொலிவியாவாகும். எசுப்பானிய காலணி ஆதிக்கத்தில் இருந்த மற்ற இனத்தவர்களை ஐரோப்பியர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் போக்கு இன்றும் தொடர்கிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.