சேமிப்பக நன்மைக்காக என்று கூகுள் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது. கூகுளில் அழித்து விட்ட கோப்புகளை இனி முப்பது நாட்களுக்குப் பிறகு மீட்க நினைத்தால் கிடைக்காது என்பதே அத்திட்டம். 02,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: கூகிள் நிறுவனம் தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி இயங்கலை சேமிப்பக தீர்வுகளுக்கான சேமிப்பு வாய்ப்புகளில் சில மாற்றங்களை கூகிள் நிறுவனம் வரும் நாட்களில் செய்யவுள்ளது என்று அறிவித்துள்ளது. அதன் விளைவாக இனிமேல் நீங்கள் அழிக்கும் கோப்புகள் மற்றும் கோப்புறைகளை கூகுள் இயக்கம் 30 நாட்களுக்கு பிறகு தானாகவே நீக்கும் என்று அறிவித்துள்ளது. இதனால் கூகுள் இயக்கத்தில் இருந்து அழித்த எந்த கோப்பாக இருந்தாலும் 30 நாட்களுக்குப் பிறகு தானாகவே நீக்கப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது. முன்பு கூகிள் இயக்கத்தில், அழிக்கப்பட்ட கோப்புகள் குப்பைத் தொட்டியில் சேமித்து வைக்கப்படும். பிறகு பயனரால் நிரந்தரமாக அகற்றப்படும் வரை அந்த கோப்புகள் கூகிள் இயக்கக் குப்பைத் தொட்டியில் காலவரையின்றி தக்கவைக்கப்பட்டு வந்தது. இந்த மாற்றத்தின் விளைவாக 30 நாட்களுக்கு மட்டுமேஇனி பயனர்கள் அழிக்கும் கோப்புகள் நேரடியாக வழக்கம்போல கூகுள் இயக்க சேமிப்பகத்தில் தக்கவைக்கப்படும். ஆதனால் கோப்புகள் நீக்கம் செய்யப்பட்ட சரியாய் 30 நாட்களுக்கு பிறகு கூகிள் இயக்க குப்பைத்தொட்டியில் உள்ள கோப்புகள் 30 நாள் காலத்திற்குப் பிறகு தானாகவே நீக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் கூகுளில் அழித்த கோப்புகளை மீட்டுக்கொள்ளலாம் என்ற உங்கள் பழைய எண்ணத்திற்கு ஒரு முழக்குப் போடுங்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



