Show all

பிக்பாஸ்தமிழ் பருவம்நான்கு போட்டியாளர்கள் யார் யாராம்!

விஜய் தொலைக்காட்சியின் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நான்காவது பருவம் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் கலந்துகொள்ளும் 11 உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

01,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் தமிழ்; பருவம் நான்கு கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வருகின்றன. நிலையில் அடுத்த மாதம் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒரு கிழமைக்கு முன்பு வெளியான கிப்ரானின் இசையுடன் இரண்டாவது விளம்பரத்தில் கமல்ஹாசனின் ஆடம்பரமான செயல்திறன் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. இந்நிலையில், இதுவரை 11 பேரறிமுகங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்திருப்பதாக அவர்கள் யார் யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. 
சனம் செட்டி
கிரன் ரதொட்
கரூர் ராமன்
சாலு சம்மு
ரியோ ராஜ்
அமுதவாணன்
அமிர்தா ஐயர்
சிவானி நாராயணன்
புகழ்
ஆர்.ஜே.வினோத்
பாலாஜி முருகதாஸ் 
ஆகியோர் இந்தப் பட்டியலில் வருவதாகத் தெரிகிறது.

கொரோனா தொற்றுக்கு எதிராக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குழு உறுப்பினர்கள் எடுத்து வருகின்றனர். உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களை வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் தனிமைப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமல் தோன்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அத்தியாயங்கள் நேரடி பார்வையாளர்கள் இல்லாமல் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. முந்தைய பருவத்தைப் போலவே குளத்தில் தண்ணீர் இருக்காது, ஆனால் இந்த முறை அது கொரோனா பாதுகாப்பு காரணம் பற்றியாம். 

நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களைக் கவர நாடகம், நட்பு, காதல், ஏமாளித்தனம் எனவும்- சீமான் கருத்துரைத்ததைப் போல, செலவுமிகுந்;;த புறணிபேசும் நிகழ்ச்சியாக சிறப்பாக முன்னெடுக்கப்படும் என்ற எதர்பார்ப்புடன்  பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.