Show all

ஆற்றல் மிக்க தடுப்பு மருந்து! 27 வகை கொரோனாக்களைச் சமாளிக்கும் திறன் கொண்டதாம்

தற்போது 27 வகை கொரோனாக்களைச் சமாளிக்கும் திறன் கொண்ட பாதுகாப்பான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக புரோட்டோ ரிசர்ச் என்கிற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தற்போது கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை உலகின் பல்வேறு நாடுகளில் அதிகரித்தும் குறைந்தும் வருகிறது. இந்நிலையில் குறுவித் (வைரஸ்) தாக்கத்திற்கு பல்வேறு விதமான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சக்தி வாய்ந்த தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சியும் நடைபெற்று வருகின்றன. கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழக இயல்அறிவர்கள் கொரோனா குறுவியின் ஆபத்தான டெல்டா வகை முதல் பல வகைகளுக்குத் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது ஒரு பாதுகாப்பான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர். தங்களது இந்தக் கண்டுபிடிப்பு சிறப்பு வாய்ந்தது என்று அவர்கள் கூறியுள்ளனர். புரோட்டோ ரிசர்ச் என்கிற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா குறுவியின் 27 வகைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மாதிரிகள் இதற்காக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. புரதத்தை கொண்டு குறுவியை அழிக்கும் புதிய மருந்து கலவையை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதன் பெயர் குறுவியப் புரதம் (வைரல் புரட்டீன்) என்பதாகும். இதன் முப்பரிணாமத்தையும் ஆராய்ந்துள்ளனர். இதற்காக தனித்துவமான கணினி வழிமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக இரைபோ கரியமில கட்டுமானச் செயல்பாடு நடைபெற்றது. இந்த ஆய்வு கலவைக்கு அனுமதி கிடைத்தால் இதன்மூலம் வல்லமை பொருந்திய புதியதடுப்பு மருந்தை உருவாக்கலாம் என இயல்அறிவர்கள் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.