Show all

தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளைத் திறக்கலாம்! மருத்துவ வல்லுநர்கள் யோசனை

குழந்தைகளுக்குக் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமாக இருக்காது என்பதால் தொடக்கப் பள்ளிகளைத் திறப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா தொற்று பாதிப்பு குழந்தைகளுக்கு தீவிரமாக இருக்காது என்பதால் தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளைத் திறக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 25 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில், 93 ஆயிரத்து 82 பேர் 12 வயதுக்குட்பட்டவர்கள். அதாவது மொத்த பாதிப்பில் 3.6 விழுக்காடு மட்டுமே குழந்தைகள் ஆவர். கொரோனா குறுவிகள் உடலில் ஒட்டிக் கொள்வதற்கான ஏற்பிகள் எனப்படும் செல்கள் குழந்தைகள் உடலில் முழுமையாக வளராமல் இருக்கும் என்பதால், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் தீவிர பாதிப்பு ஏற்படுவதில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளிகளை திறக்கும் முன் ஆசிரியர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் 18 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்றும் மருத்துவக் குழு வலியுறுத்தியுள்ளது.

18 அகவைக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தற்போது முன்னுரிமை கிடையாது என்றும், பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தாமல் வெற்றிகரமாக பள்ளிகளை நடத்தி வருவதாகவும் உலக நலங்கு நிறுவன தலைமை இயல்அறிவர் (சயின்டிஸ்ட்) சௌம்யா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தொடராண்டு குறித்த கூடுதல் தகவல் அறிய, இந்த இணைப்பில் சென்று காண்க: http://www.news.mowval.in/Editorial/katturai/Kaliyugam-123.html

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.