இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இருபத்தி இரண்டு நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. அந்த இருபத்தி இரண்டு நாடுகள் பட்டியலில் இருபத்தி மூன்றாவது நாடாக இந்தியாவை இடம் பெறச்செய்ய முயலவில்லை ஒன்றிய பாஜக அரசு. 11,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பிரிட்டன், கனடா உள்ளிட்ட ஆறு நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் இருபத்தி இரண்டு நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. அந்த இருபத்தி இரண்டு நாடுகள் பட்டியலில் இருபத்தி மூன்றாவது நாடாக இந்தியாவை இடம் பெறச்செய்ய முயலவில்லை ஒன்றிய பாஜக அரசு. ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பிரிட்டன், கனடா உள்ளிட்ட ஆறு நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற வாக்களித்த உலகத் தமிழர் நன்றியுடன் போற்றிக் கொண்டாட வேண்டிய நாடுகள்:- அர்ஜென்டைனா, ஆர்மீனியா, ஆஸ்திரியா, பகாமஸ், பிரேசில், பல்கேரியா, கோட்டிவார், செக் குடியரசு, டென்மார்க், பீஜி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மலாவி, மார்ஷல் தீவுகள், மெக்சிகோ, நெதர்லேன்ட், போலந்து, கொரியக் குடியரசு, உக்ரைன், கிரேட் பிரிட்டன் மற்றும் ஐயர்லாந்து ஐக்கிய நாடு, உருகுவே ஆகிய நாடுகள் ஆகும். வைகோ, மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், திருமாவளவன், ஆகிய தமிழக அரசியல்வாதிகள் இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை இந்திய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தனர். இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமைகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று, ஏழாண்டுகளுக்கு முன்பும் இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்போதும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்திய அரசு விலகியிருந்தது. அப்போதும் தீர்மானத்திற்கு ஆதரவாக இருபத்தி இரண்டு நாடுகள் இருந்தன. ஆனால் 47 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்திருந்தன. தற்போது அந்த 47 நாடுகளில் 36 நாடுகள் தீர்மானத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளன. வெறும் பதினோரு நாடுகள் மட்டுமே தற்போது தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருக்கின்றன. அனால் இந்தியாவின் நிலைப்பாடு மாறவேயில்லை என்கிற நிலையில்- காங்கிரஸ் அரசின் போதும் சரி, இன்றைய பாஜக அரசின் போதும் சரி, இந்தியா ஆட்சியாளர்கள் உலகின் எந்த மூலையில் வாழும் தமிழருக்கும் ஆதரவு நிலைப்பாட்டில் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியவருகிறது. இந்திய வரலாற்றில், இந்திய ஒன்றிய முன்னாள் தலைமைஅமைச்சர் விபிசிங் தவிர்த்து, அதிகாரத்தில் இருந்த வட இந்தியத் தலைவர்கள் யாரும், தமிழர் ஆதரவு களத்தில் நிபந்தனையில்லாமல் நின்றதில்லை என்பதை தமிழர் குறித்து வரலாறு தெளிவாக உணர்த்தும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.