Show all

20 பேர்கள் உயிரிழந்த சோகம்! அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்.

உலகம் முழுவதும் பொதுமக்களை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தும் மனநோயளிகள் பெருகி வருகிறார்கள். இந்த வகையாக அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டத்தில் பொதுமக்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

 

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் புகுந்த ஒரு மர்ம நபர், திடீரென்று பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சராமாரியாக சுட்டுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் அலறியடித்து கொண்டு உயிரை காப்பாற்றிகொள்ள ஓடினர். இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது. ஏராளமானோர் உயிருக்கு போராடி வருகின்றனர். தாக்குதல் நடந்த வணிக வளாகத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர், அங்கிருந்த பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்ததும், அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தாக்குதல் நடத்திய நபர் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 24 அகவை அமெரிக்க இளைஞர் என தெரியவந்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த மர்ம நபரின் இந்தத் தாக்குதல் தொடர்பான மனநோயிக்கான காரணம் விசாரணையில் தெரிய வரும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,234.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.