பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியேற்றப் படலத்திற்கு, கருத்துக் கணிப்பில், மக்கள் அளித்துள்ள வாக்குகள் சாக்சி, ரேஷ்மா இருவருக்கும் குறைந்த வேறுபாட்டில் ஏறத்தாழ சமமாக அமைந்துள்ளது. அதனால் இவரைத்தான் பிக்பாஸ் வெளியேற்றுவார் என்று கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இது வரை கருத்து கணிப்புகள் தெரிவித்த மாதிரியே பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்கள் அனுப்பப் பட்டு வந்தார்கள். இந்த முறை தெளிவாக சாக்சிதான் வெளியேறுவார் என்று தெரிவிக்கலாம் என்று பார்த்தால், பிக்பாஸ் ரேஷ்மாவை வெளியேற்றுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. மக்கள் அப்படி இருவருக்கும் ஏறத்தாழ சமமாக வாக்களித்துள்ளனர். பிக்பாஸில் பங்கேற்றுள்ள சாக்ஷி நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் அடுத்தவரை போட்டுக்கொடுத்தும், சில விசயங்களை திரித்துக் கூறுவதையுமே தொழிலாக கொண்டுள்ளார் என்றும் முதுகில் குத்துவதிலும் பின்னால் பேசுவதிலும் வல்லவராக திகழ்ந்து வருகிறார் என்றும் இணையத்தில் பதிவுகளைக் காண முடிகிறது. கடந்த கிழமையே வெளியேற்றப் பட்டியலில் இருந்த சாக்ஷி வெளியேற்றப்பட்டு விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரே நாளில் தனது அவசர புத்தியால் சேரன் மீது தவறான குற்றச்சாட்டைக் கூறி சாக்ஷிக்கு விரிக்கப்பட்ட வலையில் தானாக விழுந்து வெளியேறினார் மீரா மிதுன். இதனால் கடந்த கிழமை தப்பித்தார் சாக்ஷி. கவினின் முக்கோண காதலால் சாக்சி மீது மக்களுக்கு கொஞ்சம் பரிதாபம் ஏற்பட்டுவிட்டது. பிக்பாசுக்கும் பரிதாபம் ஏற்பட்டால் சாக்சி காப்பற்றப் பட்டு ரேஷ்மா வெளியேற்றப் படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பொறுத்திருப்போம் இன்று இரவு வரை! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,234.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.