கொரோனா பாதிப்பு காரணமாக அடுத்த பத்து ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள்கள் என்றும் இதன் மூலம் கடுமையான ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என ஐ.நா. பகீர் தகவல் அளித்துள்ளது. அப்படியானால் உலகம் முழுவதும் இந்தியாவின் மக்கள் தொகையினர் அளவிற்கு வறுமையில் தள்ளப்படுவர்களா? 22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்கள் மேலும் பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று ஐநாவின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவில் உள்ள டென்வர் பல்கலைக்கழகம் மற்றும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம் இணைந்து இந்த ஆய்வை நடத்தியது. உலகம் இப்போது கொரோனா நுண்நச்சுடன் போராடி வருகிறது. தொற்று பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையின் சார்பில் ஐ.நா.மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், அடுத்த பத்து ஆண்டுகளில், கொரோனா காரணமாக பல துறைகளில் ஏற்பட்ட பாதிப்பு பலரை வறுமையில் தள்ளும் என கூறியுள்ளது. கொரோனா நுண்நச்சின் நீண்டகால பாதிப்பாக, அடுத்த பத்து ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள்கள் என்றும் இதன் மூலம் கடுமையான ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என ஐ.நா. பகீர் தகவல் அளித்துள்ளது. கொரோனா நுண்நச்சுப் பரவலுக்கு முன்பாக உலகளவில் 4.40 கோடிக்கும் அதிகமான மக்கள் மோசமான வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று பன்னாட்டு நிதியம் எடுத்த கணக்கெடுப்பில் மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 100 கோடியாக அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது ஆனால் இப்போது கொரோனா காரணமாக பல துறைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவையும் பாதிப்பையும் கவனத்தில் கொண்டு, நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தினால், சுமார் 14.6 கோடி மக்களை மோசமான வறுமையிலிருந்து மீட்கலாம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்வர் பல்கலைக்கழகம் மற்றும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம் இணைந்து இந்த ஆய்வை நடத்தியது. நூற்று முப்பத்தி எட்டு கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் கொரோனா நோய் பாதிப்பை பொறுத்த வரை மாநில அரசுகள் தம் கடுமையான முயற்சியால் 96இலட்சம் பேர்களில் 91இலட்சம் பேர்களை கொரோனாவிலிருந்து மீட்டெடுத்திருக்கின்றன. ஆனால் கோடிக்கணக்கில் பொருளாதார பாதிப்பில் வீழ்ந்த மக்களை மீட்க ஒன்றிய அரசின் கையையே எதிர்பார்த்து நிற்கின்றன தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநில அரசுகள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



