Show all

கண்காணிக்கிறதாம் சீனா! தலைவர்கள் உள்ளிட்ட பத்தாயிரம் முதன்மையாளர்களை இந்தியாவில். 24இலட்சம் பேர்களை உலகஅளவில்

சீனாவின் கண்காணிப்பில் முதன்மைப் பொறுப்பில் இருக்கும் இந்தியர்கள் 10,000 பேர் சிக்கியுள்ளதாக வெளியான தகவலையடுத்து, தற்போது உலகமெங்கும் சுமார் 24 லட்சம் பேர் இந்த வலையில் சிக்கியிருப்பது அம்பலமாகியுள்ளது.

06,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: உலக அளவில் தலைவர்கள் உள்ளிட்ட 24இலட்சம் முதன்மையாளர்களும் இந்தியா அளவில் இந்த வகைக்குப் பத்தாயிரம் பேர்களும், சீன இராணுவ கண்காணிப்பு வளையத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவின் கண்காணிப்பில் முதன்மைப் பொறுப்பில் இருக்கும் இந்தியர்கள் 10,000 பேர் சிக்கியுள்ளதாக வெளியான தகவலையடுத்து, தற்போது உலகமெங்கும் சுமார் 24 லட்சம் பேர் இந்த வலையில் சிக்கியிருப்பது அம்பலமாகியுள்ளது.

குறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 250,000 பேர்கள் தொடர்பான தகவல்களே தற்போது வெளியானதாக கூறப்படுகிறது. சீனா இந்தக் கமுக்கக் கண்காணிப்பு நடவடிக்கையை பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கண்காணிப்பு வளையத்தில் இந்தியர்கள் மட்டுமின்றி, முதன்மைப் பொறுப்பில் இருக்கும் அமெரிக்க நாட்டவர்கள் 52,000 பேர்கள், ஆஸ்திரேலிய நாட்டவர்கள் 35,000 பேர்கள், இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் 9,700 பேரகள், கனடா நாட்டவர் 5,000 பேர்கள், இந்தோனேசிய நாட்டவர்கள் 2,100 பேர்கள், மலேசிய நாட்டவர்கள் 1,400 பேர்கள், நியூசிலாந்து நாட்டவர்கள் 793 பேர்கள் என சீனாவின் குறிப்பிட்ட நிறுவனம் தொகுத்து வைத்துள்ளதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உலகமெங்கும் கமுக்கமாகச் செயல்படும் 20 நிறுவனங்கள் மூலமாகவே சீனா இந்த முதன்மையாளர்களின் தகவல்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் ஒரு நிறுவனம் அமெரிக்காவின் கான்சாஸ் பகுதியிலும் இன்னொன்று தென் கொரிய தலைநகரிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

முதன்மையாக இராணுவம் தொடர்பான தகவல்களுக்கு மட்டுமே குறித்த நிறுவனம் முதன்மைத்துவம் அளிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் குறித்த நிறுவனம் கமுக்கமாகச் சேகரித்துள்ள தகவல்கள் அனைத்தும் சீனா அரசுக்கும் இராணுவத்திற்கும் பயன்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் முதல் குற்றவாளிகள் வரை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.  சீனாவின் கமுக்கத் தகவல் சேகரிப்பு நிறுவனங்களில் எஞ்சிய 18 நிறுவனங்கள் எங்கே இருந்து செயல்படுகின்றன என்பது தொடர்பில் கண்டறியப்பட்டால் சீனாவை உலகம் எவ்வாறு எதிர்கொள்ளும். சீன எதிர்நிலைப்பாட்டில் இருக்கிற அமெரிக்காவும், நமது ஒன்றிய பாஜக அரசும் என்ன செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புப் பொறிகள் தெறிக்கத் தொடங்கியுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.