Show all

தொடர்வண்டித்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்! கொரோனா முன்னெடுத்த சோகம்

கொரோனா தொற்றுக்கு ஆளாகி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் அங்காடி மரணமடைந்தார்.

07,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: தொடர்வண்டித்துறை இணை அமைச்சர், 65 அகவை சுரேஷ் அங்காடி மரணமடைந்தார். கொரோனா தொற்றுக்கு ஆளாகி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் அங்காடி மரணமடைந்தார். 

இந்தியாவில் கொரோனாவிற்கு பலியான முதல் ஒன்றிய அமைச்சர் ஆவர். நாடு முழுவதும் 56 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 45 லட்சம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 

கொரோனா களப்பணியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றஉறுப்பினர்கள், அமைச்சர்கள் என அனைவரையும் கொரோனா தொற்று பாதித்துள்ளது. ஒன்றியஅமைச்சர்கள், உள்துறை அமைச்சர் அமித்சா, வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், நீரியல்துறை அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத், நாடாளுமன்ற பாடுகளுக்கான மோஸ் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று குணமடைந்தனர். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நான்காவது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்காடி ஆவார். கடந்த மாதம் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான முதல் ஒன்றிய அரசு அமைச்சர் சுரேஷ் அங்காடி என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.