ஒன்றிய பாஜக அரசின் தொடர் அரங்கேற்றத்தில், அடுத்த மனுவாதி சட்டமான, மூன்று வேளாண் சட்டமுன்வரைவுகளுக்கு எதிராக வரும் திங்கட் கிழமை திமுக மாவட்டந்தோறும் போராட்டத்தை முன்னெடுக்கிறது கூட்டணிக் கட்சிகளுடன். 06,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய ஒன்றிய ஆட்சியில் பாஜக அரியணை ஏறியதில் இருந்து ரஜபுத்திர மன்னர்கள் உருவாக்கிய மனுவாதி பாரதத்தை மீட்டெடுப்பதில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டு வருகின்றார்கள். அதற்கான மனுவாதி சட்ட முன்வரைவுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்கள். இந்தியாவின் வடக்கு மாநிலங்கள் அன்றைக்கு ரஜபுத்திர மன்னர்கள் காலம் போலவே ஒத்துழைப்பை முன்னெடுத்து வருகின்றன. அன்றைக்கு தமிழகத்தில் தமிழர் நெறிகளுக்கு வலுவான மன்னர்கள் இல்லாத நிலையில், ரஜபுத்திரர்கள் மனுவாதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகமும் வளைக்கப்பட்டது. இன்றைக்கும் தமிழகத்தில்- தமிழர் நெறிகளுக்கு வலுவான ஆட்சியாளர்கள் இல்லாத நிலையில்- ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்துள்ள வேளாண்மையில் கார்பரேட்டுகளின் அதிக்கத்திற்கான 3சட்டமுன்வரைவுகளை தமிழக அதிமுக அரசு ஆதரவுப்பாட்டை வழங்கியிருக்கிறது. தற்போதைக்கு தமிழகத்தின் நம்பிக்கைக்கான விடிவெள்ளியாக கருதப்படுகிற திமுக- வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட வாரியாக எதிர்வரும் திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது. சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மூன்று மனுவாதி வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்த அதிமுக அரசை கண்டித்தும் மாவட்டந்தோறும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



