Show all

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பாதிக்கும்! மிசன் சக்தி சோதனையால் சிதைக்கப்பட்ட செயற்கைக்கோள் துண்டுகள்: நாசா அறிவிப்பு

செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்திய இந்தியாவின் மிசன் சக்தி சோதனையின் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பாதிக்கக்கூடும் என நாசா அறிவித்துள்ளது. 19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும், மிசன் சக்தி சோதனையை இந்தியா செயல்படுத்தி உள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது. 

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில்: 'செயற்கைகோள் அழிப்பு ஏவுகணை சோதனை தொடர்பாக இந்தியாவின் அறிக்கையை நாங்கள் பார்த்தோம். விண்வெளி பாதுகாப்பு, ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும். ஆனால் அதேசமயம், செயற்கைகோள் அழிப்பு முயற்சியால் விண்வெளியில் ஏற்படும் குப்பைகள் கவலை அளிப்பதாக உள்ளது' என கூறியிருந்தார்.

இந்நிலையில் நாசா ஊழியர்கள் நடுவே, விஞ்ஞானி ஜிம் பிரிடென்ஸ்டின் பேசியதாவது: ஏவுகணை சோதனையின் போது இந்தியா சுட்டு வீழ்த்திய செயற்கைகோள் 400 துண்டுகளாக உடைந்து விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் 60 துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் சுமார் 10 செ.மீ அளவு கொண்டவை.

அவற்றில் 24 துண்டுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வட்ட பாதையில் மிதக்கின்றன. அது மிக மிக ஆபத்தானது. ஒரு நாடு இப்படி செய்தால், பிற நாடுகளும் இதேபோல் செய்ய தொடங்கும். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். 

இது போன்று சோதனையினால் என்ன பலன் என்பதை கூறுவது அவசியமாகும். எதிர் காலத்தில் இத்தகைய நடவடிக்கை ஒத்துக்கொள்ள கூடியவை அல்ல. இதனால் ஏற்படும் பின்விளைவுகளை நாசா ஆராயும்.

இதற்கிடையே தாக்கி நொறுக்கப்பட்ட இந்திய செயற்கைகோளின் துண்டுகள் சர்வதேச விண்வெளி ஆய்வகம் மற்றும் செயற்கைக் கோள்களின் மீதும் மோதும் அபாயம் உள்ளது என அமெரிக்க ராணுவம் கணித்துள்ளது.

விண்வெளியில் இதுவரை 23 ஆயிரம் பொருட்கள் 10.செ.மீ அளவில் மிதந்து கொண்டிருப்பதாக அமெரிக்க ராணுவம் கண்டு பிடித்துள்ளது. அதில் 10 ஆயிரம் துண்டுகள் செயற்கைக்கோளின் துண்டுகளாகும். இவற்றில் 3 ஆயிரம் துண்டுகள் மட்டும் 12 ஆண்டுகளுக்கு முன்பு சீனா நடத்திய செயற்கைகோள் அழிப்பு சோதனையின் போது உருவானது. என்று தெரிவித்தார்.

செயற்கைக் கோள் என்றால் என்ன? அதன் வேலை என்ன? அது எப்படி இயங்குகிறது? அதன் பயன் பாடுகள் என்ன? என்று தெரிந்து கொண்டால்: செயற்கைக் கோள்களை அழிக்க வேண்டிய தேவை இருக்கிறதா? செயற்கைக் கோளை அழிப்பது சரியா தவறா என்பதை யார் வேண்டுமானாலும் எளிதாக விளங்கிக் கொள்ளவும், மற்றவர்களுக்கும் விளக்கவும் முடியும்.

செயற்கைக் கோள் என்பது பொருளாதாரத்தில் வளர்ந்த அல்லது தொழிற் நுட்பத்தில் வளர்ந்த நாடுகள் முழுக்க முழுக்க தங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக வானத்தில் கட்டிக் கொள்கிற வீடுகள். 

இந்த செயற்கைக் கோள்கள் நாம் வாழும் புவியிலிருந்து சுமார் 300கிமீ தூரத்தில் அந்த அந்த நாடுகள் அனுப்பும் செயற்;கைக் கோள்கள் அந்த அந்த நாடுகளுக்கு நேர் மேலே புவியின் வேகத்தில் புவியையும் சுற்றிக் கொண்டு, நமது புவியோடு சேர்ந்து சூரியனையும் சுற்றி வரும். 

இப்படிச் சுற்றி வருவதற்கு அந்தச் செயற்கை கோள்களுக்கு எந்த எரிபொருளும் தேவையில்லை. நமது புவி எந்த அடிப்படையில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறதோ அதே அடிப்படையில் அது காலம் காலமாக சுற்றி வரும். 

அந்தச் செயற்கைக் கோளை ஏவுகணைகள் மூலம் வானத்திற்கு கொண்டு சென்று, புவியின் வட்டப் பாதையில் புவியின் வேகத்தில் சுழலுமாறு விட்டுவிடுவதுதான் மனித மூளையில் உதித்த விஞ்ஞானம்.

ஒரு செயற்கை கோள் வான் வெளியில் வெடிக்க வைக்கப் படும் போது, அந்த வெடிப்பில் எத்தனைத் துண்டுகள் உருவானாலும், அத்தனைத் துண்டுகளும் வெடிக்க வைக்கப் பட்ட வேகத்தில், வௌ;வேறு திசைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயற்கைக் கோளாக கண்ணாபின்னாவென்று சுற்றிக் கொண்டிருக்கும். அந்தத் துண்டுகளால் செயற்கைக் கோள்களுக்கும், வானத்தில் பறக்கிற விமானத்திற்கும், சேதத்தை உருவாக்கலாம் உருவாக்காமலும் இருக்கலாம். ஏனென்றால் வெடித்துச் சிதறடிக்கப் பட்ட துண்டுகளின் வேகமும் திசையும் தீர்மானத்திற்கு அப்பாற்பட்டது. வானத்தில் இருக்கிற கோள்கள் எல்லாம் கூட தீர்மானிக்க வாய்ப்பான வகையில் தாம் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தச் செயற்கை கோள் வெடிப்பு முயற்சியால் வானத்தில் தேவையில்லாத குப்பைகளை வீசி எறிகிறோம். 

ஒவ்வொரு நாடும் தாங்கள் அனுப்பிய செயற்கை கோள் மூலமாகவே தொலைக்காட்சி, செல்பேசி, இணையப்பயன்பாடு, வானிலை அறிக்கை ஆகியவற்றை பயன்படுத்தி வளர்ச்சி பெற்று மகிழ்ந்து வருகின்றன.

ஒரு நாடு அனுப்பும் செயற்கைக் கோளால் இன்னொரு நாட்டிற்கு எந்த வகையிலும் ஒரு காசு அளவிலேனும் பாதிப்பு என்பது இல்லவேயில்லை.

ஆனால் ஒரு நாட்டின் முதன்மையான செயற்கைக்கோளை அழித்து அந்த நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக நாசப்படுத்தலாம். 

அந்த வகையாக எந்த நாட்டையும் நாங்கள் நாசப்படுத்த முடியும் என்று உலகில்- அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய மூன்று நாடுகள் பீற்றிக் கொண்டிருந்தன. இனி இந்தியாவும் பீற்றிக் கொள்ளலாம். ஆனால் இந்தப் பீற்றல் இந்தியாவில் ஒற்றை நெல்மணியை உருவாக்குவதற்குக் கூட பயன்படாது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,110.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.