Show all

இயக்குநர் மகேந்திரன் காலமானார்! முள்ளும்மலரும் படத்தின் மூலம் தமிழ்த்திரை ஆர்வலர்களின் நெஞ்சம் கவர்ந்தவர்

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு அகவை 79.

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன். அவருக்கு அகவை 79. உடல் நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி காலமானார். 

இயக்குநர் மகேந்திரன் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த முள்ளும் மலரும் படம் மூலம் அறிமுகம் ஆனவர். தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட தமிழ் திரையுலகின் வெற்றிப் படங்களை இயக்கியவர். 

தமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்காக அவ்வப்போது சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அவர் அகவை முதிர்வின் காரணமாகவும், உடல் நலக்குறைவின் காரணமாகவும் இன்று இயற்கை யெய்தினார். தமிழக மக்களும், பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,110.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.