Show all

திமுக இரும்புக் கட்சியில் எப்படி வந்தது யுரேனியம் நேர்த்துகள்! கு.க.செல்வம்

திமுக சட்டமன்ற உறுப்பினராம், பெயர் கு.க.செல்வமாம். அவர் திமுகவிலிருந்து பிரிந்து அதுவும் தமிழகத்தில் நோட்டாவற்கு கீழாக மதிக்கப்படுகிற கட்சியான பாஜகவில் சேர்ந்து இருக்கிறாராம்.  

22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அணு பிளப்புக்கு இரும்பு (26), வெள்ளி (47), தங்கம் (79), இப்படியான தனிமங்களையெல்லாம் பயன்படுத்த முடியாது. யுரோனியம் (92) தாம் அதற்கு சரிப்பட்டு வரும். அதில்தாம் கடைசி வட்டத்தில் இரண்டு நேர்கள் (எலக்ட்ரான்) யாராலும் தாக்கப்பட்டு அணுப்பிளப்புக்கு தயாராக இருக்கும். யுரோனியத்தின் அணுஎண் 92. அதில் தாம் கடைசி வட்டத்தில் மையத்தின் தொடர்பு குறைந்து சிறியதான வெளித்தகாக்கத்தின் மூலம் பிரிந்து அணுப்பிளப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு.  

திமுக இரும்பு. அதிலிருந்து ஒரு நேர்த்துகள் அணுப்பிளப்பிற்கு தயாராகிறது என்றால் எளிமையாக நடக்கக்கூடிய நிகழ்வு அல்ல. திமுகவை பிளக்க இதுவரை எழுந்த சம்பத், எம்ஜியார், வைகோ என்பவர்கள் எல்லாம் மாபெரும் பிரளயங்கள். அவர்களுக்கென்று தனித்த வரலாறு உண்டு.  

திமுக சட்டமன்ற உறுப்பினராம், பெயர் கு.க.செல்வமாம். அவர் திமுகவிலிருந்து பிரிந்து அதுவும் தமிழகத்தில் நோட்டாவற்கு கீழாக மதிக்கப்படுகிற கட்சியான பாஜகவில் சேர்ந்து இருக்கிறாராம்.  

ஆனால் இந்த கு.க.செல்வம், திமுகவின் தலைமை நிலைய அலுவலகச் செயலாளராம், தலைமைச் செயற்குழு உறுப்பினராம். எப்படி வீணாய்ப் போனது திமுக இப்படி? இரும்பான திமுகவிற்குள் எப்படி இந்த யுரேனியம் நேர்த்துகள்? (எலக்ட்ரான்)  திமுக விழித்தெழ வேண்டும்!

இந்தியாவில் சிறப்பான ஆட்சி நடத்திவரும் மோடிக்குப் பாராட்டுத் தெரிவிப்பதாக குறிப்பிட்ட கு.க.செல்வம், நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் இராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் உடனான உறவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் என்று கூறித் திரிகின்றாராம். இதற்கு, தன் மீது திமுக நடவடிக்கை எடுத்தால், அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்கிறாராம் கு.க.செல்வம். 

இதனைத் தொடர்ந்து, கு.க.செல்வத்தை திமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், அவர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

திமுக கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதையொட்டி, அவரைத் தற்காலிகமாக (எதற்கு ஸ்டாலின் அண்ணா தற்காலிகம்? நடுவண் அரசில் இருக்கும் பாஜக மீது அவ்வளவு அச்சமா!) திமுகவிலிருந்து நீக்கி வைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.