ஹிப்ஹாப் ஆதி வரும் விடுதலை நாளன்று ‘நான் ஒரு ஏலியன்’ என்ற இசைத்தொகுப்பை வெளியிட இருக்கிறார். அந்த இசைத்தொகுப்பின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது. 22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி, விடுதலை நாளில் புதிய இசைத் தொகுப்பை வெளியிட இருக்கிறார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘ஹிப்ஹாப் தமிழா’ என்ற இசைத்தொகுப்பு மூலம் பேரறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. இதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்த ஆதி, மீசையை முறுக்கு படம் மூலம் நடிகரானார். இப்படம் கொண்டாடிகளிடம் வரவேற்பு பெறவே நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தமிழ்த் திரையில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி வரும் விடுதலை நாளன்று திரைப்படங்கள் சாராத வெளி இசையுலகில் ‘நான் ஒரு ஏலியன்’ என்ற இசைத்தொகுப்பை வெளியிட இருக்கிறார். முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது, முழு இசைத்தொகுப்பு விடுதலை நாளில் வெளியாக இருக்கிறது. இதற்கான சுவரொட்டி தற்போது வெளியாகி தீயாகி வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.