Show all

தமிழிசை முயற்சி! நீச்சல் தெரியாது ஆற்றில் மூழ்குகிறவன், பக்கத்தில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்தவரை பற்றி, அவரையும் மூழ்கடித்தது போல

பாஜகவுடன் கூட்டு என்றாலே, வைப்புத் தொகையைக் காலி செய்து விடுவார்கள் தமிழக மக்கள். இந்த நிலையில், பாஜகவுடன் கமுக்கக்கூட்டு என்றால், ஒட்டு மொத்தக் கணக்கையும் முடித்து விடுவார்கள் தமிழக மக்கள் என்பதைப் புரிந்து கொண்ட தமிழிசை: பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார் என்ற புரளியை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். 

01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பதவி பசி காரணமாக பாஜகவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் என தெரிவித்தார்.

அதிர்ந்து போன ஸ்டாலின், தமிழக மக்களிடம் இது உண்மையில்லை என்று எப்படியாவது நிரூபித்தாக வேண்டுமே என்ற அச்சத்தில், நான் பாஜகவிடம் பேசியதை அவர்கள் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுகின்றேன், முடியவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தமிழிசை தயாரா என கேள்வி எழுப்பினார். 

பாவம் ஸ்டாலின் நீங்கள்! தமிழிசை அரசியலில் இருந்தால் என்ன? விலகினால் என்ன? வேறு ஏதாவது பெரியதாக பணயம் கேளுங்கள் என்று சிரிக்கிறார்கள் தமிழ் மக்கள்.

என்னை அரசியலை விட்டு விலகச்சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. (தமிழக மக்கள் அங்கீகரித்தா நான் அரசியலில் இருக்கிறேன்?) தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் திமுக பேசியது என நான் கூறியது உண்மை தான்.

நான் சொல்வதில் எப்போதுமே உண்மை இல்லாமல் இருக்காது. (தமிழக மக்கள் என்னை கலாய் கலாய் என்று கலாய்ப்பதிலேயே எனது செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து புரியவில்லையா?) மு.க.ஸ்டாலின் அரசியலில் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் ஆசை. நான் கூறியது உண்மையா இல்லையா என்பதை மு.க. ஸ்டாலின் நிரூபிக்கட்டும் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,153. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.