இணையத்தில் நாதுராம்கேட்சே என்று தமிழில் தேடினால் 0.56 வினாடிகளில் 21,100 முடிவுகள் கிடைக்கிறது. ஆங்கிலத்தில் தேடினால் 0.61 வினாடிகளில் 16,60,000 முடிவுகள் கிடைக்கின்றன. அவற்றில் கமல் மீதான விவாதங்களும் உள்ளடக்கம். இந்தச் தேடல்களில் கமல் சொன்னது தவறு என்று நிகழ் விவாதங்கள் தாம் பேசுகின்றனவே யொழிய, பழைய தகவல்கள் எல்லாம் கமல் சொன்ன செய்தியை நூற்றுக்கு இருநூறு விழுக்காடுகள் அங்கிகரிக்கின்றன. கமல் சொன்ன தகவல் உண்மைதான். 01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மன்னார்குடி மடத்தலைவர் கமல்ஹாசனுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது பேசிய கமல்ஹாசன், இந்தியாவின் முதல் தீவிரவாதி என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் அவர் ஹிந்து என்றும் வரலாற்றில் பதிவான தகவலைத் தெரிவித்தார். கமலின் தகவல் உண்மையா பொய்யா என்று யாரும் விவாதிக்க வில்லை. ஆனால் தகவலைச் சொன்ன கமலை தீவிரவாதியாக பார்க்கிறார்கள். சிலர் கமலுக்கு எதிராக தீவிரவாதி போல் மிரட்டுகிறார்கள். ஆனால் இந்தவகைக்காக, கமல்ஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் ஏற்கவேயில்லை; இன்று தள்ளுபடி செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மன்னார்குடி செண்பக மன்னார் மடத்தலைவர் திருச்சி திருவரங்கத்தில் உள்ள அவரது மடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கமல்ஹாசன், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் லஞ்சம் பெற்று கொண்டு, ஹிந்து மதத்திற்கு விரோதமாக பேசி வருவதாக குற்றஞ்சாட்டினார். 'ஐஎஸ் அமைப்பு இலஞ்சம் கொடுக்கிற தகவல் எல்லாம் மன்னார்குடி செண்பக மன்னார் மடத்தலைவருக்கு தெரிந்திருக்கிறது என்றால், இலங்கை குண்டுவெடிப்பு குறித்து இவரிடம் விசாரித்தால், நல்ல துப்பு கிடைக்கும்' என்று இணையத்தில், மன்னார்குடி செண்பக மன்னார் மடத்தலைவர் குறித்துக் கலாய்க்கத் தொடங்கி விட்டார்கள். மேலும் பேசிய அவர், ஹிந்து அமைப்புக்கள் இணைந்து கமல் ஹாசனை வெளியே நடமாட விடமாட்டோம் எனவும் மிரட்டல் விடுத்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,153.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நடமாட விடமால் செய்வோம் என மன்னார்குடி மடத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



