Show all

இன்று மாலை வெளியாகிறது! தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பட்டியல்

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை வெளியாகவுள்ளது.

09,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், பதினைந்து நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு பதிகை வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. தமிழகத்தில் 1,067 பெண்கள், 6,162 ஆண்கள் என, மொத்தம், 7,232 பேர் வேட்பு மனு பதிகை செய்தனர். அதிகபட்சமாக கரூரில், 97 பேர் வேட்புமனு பதிகை செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து முடிந்த நிலையில், இன்று மாலை 3 மணி வரையில் வேட்புமனுவை திரும்ப பெற விரும்புவோர், பெற்றுகொள்ளலாம்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும். தமிழகம் மட்டுமல்லாது கேரளா, புதுச்சேரியிலும் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நாளிலேயே தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் அதே நாளில் தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலுக்கு அதிமுக மட்டுமே மிக அதிக பொருட்செலவில் கூகுள் இணையத்தளம் உட்பட அனைத்து ஊடகங்களிலும் பகடியாடல் விளம்பரங்களின் மூலம் கருத்துப் பரப்புதல் செய்து வருகிறது. பல விளம்பரப்பகடிகள்  அதிமுக தங்களைத் தாங்களே கிண்டலடித்துக் கொள்வது போல இருக்கிறது. எடுத்துக் காட்டு:- வந்துட்டாங்கப்பா மீத்தேன் குருப் என்கிற பகடியாடல் விளம்பரம். பாதிநாள் வரை அரசு செலவிலேயே தேர்தல் கருத்துப்பரப்புதல் செய்து வந்த அதிமுக தற்போது சொந்த வருமானத்தில் கருத்துப் பரப்புதல் செய்;து வருகிறது. 

இதே போல நாம் தமிழர் கட்சிக்கு தொண்டர்கள் தன்னார்வமாக கருத்துப் பரப்புதல் காணொளிகள் மூலம் இணையத்தைக் கலக்கி வருகிறார்கள். திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் எல்லாம் இயல்பான போக்கில் கருத்துப் பரப்புதல் செய்து வருகின்றன. 

பாஜகவிற்கு தப்பித் தவறியும் வாக்களித்து விடாதீர்கள் என்கிற கருத்துப் பரப்புதல், தேநீர் கடைகள் தொடங்கி முகநூல், புலனம், கீச்சு என அனைத்து பகுதிகளிலும் தமிழக மக்களின் தன்னார்வ கருத்துப் பரப்புதலாக முன்னெடுத்து முழங்கப்பட்டு வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.