Show all

மம்தா பானர்ஜி சீற்ற முழக்கம்! தலைமைஅமைச்சர் மோடியின் முகத்தை பார்க்க நாங்கள் விரும்பவில்லை

கூட்டாட்சி தத்துவத்தைக் கடைபிடிக்காத பாஜக, ஒற்றிய ஆட்சிக்கு எங்களுக்குத் தேவையில்லை. அந்த ஆட்சியின் அடையாளமான தலைமைஅமைச்சர் மோடியின் முகத்தை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. அந்த வன்முறையாளர்கள், எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் வெற்றிக்குப் பிறகு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்திற்கு முனைவோம் என்று தேர்தல் கருத்துப் பரப்புதல் கூட்டத்தில் முழங்கி வருகிறார் மம்;தா.

07,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: இருநூற்று தொன்னூற்று நான்கு தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்காள சட்டமன்றத்திற்கு வரலாற்றுப் புதுமையாக, 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்படி 14, 19, 24, 28 ஆகிய நாட்களில் பங்குனி மாதத்தில் நடப்புத் தமிழ்த்தொடராண்டு-5122லும் அடுத்து 4, 9, 13, 16 ஆகிய நாட்களில் சித்திரை மாதத்தில் அடுத்து வரவுள்ள தமிழ்த்தொடராண்டு-5123லும்  தேர்தல் நடத்தப்படவுள்ளது. அப்புறம் 19 சித்திரை ஞாயிற்றுக் கிழமை அன்று (மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29) தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் வங்காளத்தில் ஆட்சி நிருவாகத்தில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

சதிச்செயலா விபத்தா என்று காரணம் அறியப்படாத நிகழ்வில் காலில் காயம் ஏற்பட்ட மேற்குவங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் கிழக்கு மதினாப்பூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். 

அந்தக் கூட்டத்தில்தான், கூட்டாட்சி தத்துவத்தைக் கடைபிடிக்காத பாஜக, ஒற்றிய ஆட்சிக்கு எங்களுக்குத் தேவையில்லை. அந்த ஆட்சியின் அடையாளமான தலைமைஅமைச்சர் மோடியின் முகத்தை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. அந்த வன்முறையாளர்கள், எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் வெற்றிக்குப் பிறகு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்திற்கு முனைவோம் என்று முழங்கியுள்ளார் மம்தா.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.