Show all

‘தமிழி’ குறும்படம்! மூன்று அத்தியாயங்கள் வெளியிட்டுள்ளார் ஆதி. பல இலட்சம் தமிழர்களால் பாராட்டு பெற்று வருகிறது

ஹிப்ஹாப் தமிழா ஆதி அவர்கள், தமிழி என்று தலைப்பில் மூன்று அத்தியாயங்களை மூன்று குறும்படங்காளாக வெளியிட்டிருக்கிறார். இலட்சக் கணக்கான தமிழர்களும், தமிழர் அல்லாதவர்களும் பார்த்து பாராட்டியும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும் வருகிறார்கள்.

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிப்ஹாப் தமிழா ஆதி அவர்கள், தமிழி என்று தலைப்பில் மூன்று அத்தியாயங்களை மூன்று குறும்படங்காளாக வெளியிட்டிருக்கிறார். இலட்சக் கணக்கான தமிழர்களும், தமிழர் அல்லாதவர்களும் பார்த்து பாராட்டியும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும் வருகிறார்கள்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி அவர்களின் அந்த முத்தான மூன்று படைப்புகளை வெளியிடுவதற்கு மிகச் சிறப்பான முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல அத்தியாயங்கள் தொடரும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

பல இலட்சக்கணக்கான தமிழர்கள் இந்தக் குறும்படங்களை பார்த்து விட்டு மனம் விட்டு பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். பிறமொழியாளர்களும் கூட மனம் விட்டு பாராட்டியிருப்பது தமிழை யார் தொட்டாலும் அவர்கள் சிகரம் தொட அது நிறையத் தரும் என்பதைப் புரியவைப்பதாக இருக்கிறது. மூன்று அத்தியாயங்களையும் நீங்களும் பார்த்து மகிழுங்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,314.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.