கீழடி அகழ்வாராய்ச்சியில், புதிய வடிகால் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக தொல்லியல் துறை வியந்து பாராட்டியுள்ளது. 06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிவகங்கை மாவட்டம் கீழடியில், தமிழக தொல்லியல் துறை சார்பாக நடைபெற்ற ஐந்தாம் கட்ட அகழ்வாய்வுப் பணி, அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில் தமிழக தொல்லியல்துறை சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழ்வராய்ச்சிகளில் கண்டறியப்படாத, வேறுபட்ட மூன்று வகையான வடிகால் குழாய்கள், கீழடியில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுருள் வடிவிலான சுடுமண் குழாய் மற்றும் பீப்பாய் வடிவிலான 3 சுடுமண் குழாய்கள், ஒன்றோடு ஒன்று பொருந்திய நிலையில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,314.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.