லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் உண்மையானால் தமிழக அரசு கலையும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எம்ஜியார் மறைவுக்குப் பிறகு நேரடியாக அதிமுகவிற்கு பொறுப்பேற்க வேண்டியவர் செயலலிதா என்பதுதாம் தமிழக மக்கள் தீர்மானம். ஆனால் கட்சியில் இருக்கிற மேல்மட்டத்தினருக்கு செயலலிதா அவர்களின் தலைமையை ஏற்பதில் முழுக்க முழுக்க கௌரவப் பிரச்சனை குறுக்கே நின்றது. ஆதனால் அவர்கள் எம்ஜியாரின் துணைவியாரை முன்னெடுத்து செயலலிதா அவர்களை ஒதுக்கினார்கள். அதற்கு நிறைய தளங்களில் நிறைய பேர்கள் நிறைய மெனக்கெட்டார்கள். செயலலிதா அவர்களை அதிமுக தலைமையில் கொண்டாட எங்களுக்கு ஒன்றும் கௌரவக் குறைவு இல்லை என்;கிற தமிழக மக்களின் அங்கிகாரத்தைப் பெறுவதற்கு செயலலிதா அவர்கள் பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. போராட்டத்திற்கு பின்பு அதிமுகவைக் செயலலிதா அவர்கள் கைப்பற்றியது துரோகத்தை எதிர்த்து வென்ற வரலாறு. செயலலிதா அவர்கள் மறைவுக்குப் பிறகு நேரடியாக அதிமுகவிற்கு பொறுப்பேற்க வேண்டியவர் சசிகலா என்பதுதாம் தமிழக மக்கள் தீர்மானம். நிகழ்காலமோ அதை செரிமானம் செய்துகொள்ள முடியாத கௌரவப் பிரச்சனை காலமாகும். அன்றைக்கு செயலலிதா அவர்கள் அதிமுக தலைமையை ஏற்றுக் கொள்வதில் என்ன கௌரவக் குறைபாடு இருந்ததோ அதே மாதிரியான கௌரவக் குறைபாடு. ஒரு அதிமுக மேல்மட்டத்தினராலும் செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. திமுகவினரோ, பாஜகவினரோ சில அறிவு ஜீவிகளோ அதிமுகவினரை வெட்கப் படும்படி வேறு பார்த்தார்கள். அன்றைக்குப் போல இன்றைக்கும் பலதளங்களில் பலரின் மெனக் கெடல்கள். பாஜகவின் சிறப்பு மெனக்கெடல். செயலலிதாவை விட கூடுதல் அசிங்கப்படுத்தப்பட சசிகலா சிறையில். அன்றைக்கு செயலலிதா அவர்கள் தனித்து அதிமுகவை மீட்டார் இன்றைக்கு தினகரன் துணையுடன் சசிகலா. இங்கே நமக்கு ஒரு வரலாற்றுச் செய்தி நினைவுக்கு வருகிறது: அதித்த கரிகாலன் மரணத்திற்கு பிறகு அவரது தம்பி அருள்மொழி (இராசராசசோழன்) அரியணை ஏறும் வாய்பு கிடைத்தது, ஆனால் தன் அண்ணன் மரணத்தில் உள்ள ரகசியங்களைக் கண்டுபிடிக்கவும், வங்க கடலில் வணிக கப்பல்கள்களை கொள்ளையடிக்கும் கடற்கொள்ளையர்களை அழிக்கவும், சோழ தேசத்தில் நிலவிய குழப்பான சூழ்நிலையை அகற்றவும், போன்ற இதர காரணங்களால் உத்தம சோழருக்கு அரியணையை விட்டு கொடுத்தார், இவருக்கு பக்கபலமாக அவரது நண்பர் வந்திய தேவன் இருந்தார் என்பது கூறிப்பிடதக்கது. சசிகலா உத்தமசோழரான எடப்பாடிக்கு பதவி வழங்கி வந்தியத் தேவன் ஆன தினகரனை துணை அமர்த்தி விட்டுப் போனார். ஆதனால் கல்கிக்கு பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல் கிடைத்தது போல இங்கே இப்போது வரலாறு நடப்பில் இருந்து கொண்டு இருக்கிறது. வந்தியத் தேவன் தினகரன் சாதனைகள் விரைவில் அதிமுகவை சசிகலாவிடம் மீட்டு ஒப்படைக்கும். லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் உண்மையானால் தமிழக அரசு கலையும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மொத்தம் 22 தொகுதிகள் தமிழகத்தில் காலியாக உள்ள நிலையில், இடைத் தேர்தல் நடைபெறுவது 18 தொகுதிகளுக்கு மட்டும். இந்த நிலையில்தான், நேற்று, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு வெளியானது. 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணி, 11 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது. அதேநேரம், அதிமுக கூட்டணி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது. மற்ற தொகுதிகளை அமமுக வெல்லக்கூடும். அதாவது அதிமுகவைவிடவும் அமமுக அதிக தொகுதிகளை வெல்லும். இவ்வாறு அந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. செயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்ட 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தார் பேரவைத்;தலைவர். தகுதி நீக்கம் செல்லுபடியாகும் என சென்னை உயர் அறங்யுகூற்றுமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டமன்றத்தில் மொத்த பலம் 230ஆக உள்ளது. அதில் பெரும்பான்மையை நிரூபிக்க பாதிக்கும் மேல் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் தேவை என்பதால், அதிமுக ஆட்சியை தொடர 116 சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் தேவை. 234 தொகுதிகள் என்ற அடிப்படையில் பார்த்தால், 118 சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் தேவைப்படும். ஆனால் 4 தொகுதிகள் காலியாக உள்ளதால் 116 சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் மட்டுமே இப்போதைக்கு போதுமானது. லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக் கணிப்புப்படி அதிமுகவுக்கு 2 தொகுதிகள்தான் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையாகி 116 சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தை அதிமுக பெற்றாலும், அது கத்தி மேல் நடப்பதை போலத்தான். திமுகவோ, அமமுகவோ ஏதாவது ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழுத்தாலும் மீண்டும் சிக்கல்தான். அதிமுகவை பொறுத்தளவில் குறைந்தது 8 தொகுதிகளையாவது வென்றால்தான் நிம்மதியாக ஆட்சியை தொடர முடியும் என்ற சூழல் உள்ளது. என்று கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அதிமுகவை தினகரன் மூலமாக சசிகலா கைப்பற்றுவார் என்பதற்கான முன்னோட்டம் இது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,114.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.