சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.இராஜாவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட பிரேமலதா, ராஜா விஜயகாந்தை போல துணிச்சலானவர் என்று பாராட்டி பேசினார். 23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்ற தேர்தலை யொட்டி தமிழக தேர்தல் களம், சொரணையின்மையும், பொய்யுரைகளும், மாய்மாலங்களும் நிறைந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் சிவகங்கையில் பாஜக வேட்பாளர் ஹெச். இராஜாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார் பிரேமலதா. அப்போது பேசிய அவர் விஜயகாந்தை போல் எச்.ராஜா மிகவும் தைரியமானவர். மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். எதற்கும் அச்சப்படமாட்டார். இப்படி துணிச்சலாகப் பேசும் ஆட்களிடம் உண்மை இருக்கும். ஆகவே ஊழல் திமுக கூட்டணியை ஒழித்துக்கட்டிவிட்டு மக்கள் இவருக்கு ஓட்டு போடுங்கள் என கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,114.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.