Show all

மாருதி ஆம்னி நிறுத்தம்! இந்தியாவின் சந்து பொந்து இண்டு இடுக்களில் எல்லாம், 35 ஆண்டுகளாகச் சுற்றித் திரிந்த வண்டி

கடந்த தலைமுறையின் சாகச வண்டி! மாருதி ஆம்னியோடு நெருக்கமான பிணைப்பு இனிமையான மலரும் நினைவுகள் இந்தச் செய்தியைப் படிக்கும் போது கடந்த தலைமுறைகாரர்களுக்கு அவர் ஓட்டிய மாருதி ஆம்னி கண்முன் வந்து நிற்கும்.

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பயணிப்பவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கார் மாதிரிகள் நிறைய வந்து விட்ட படியால், பயணிப்பவர்களின் திறமையை மட்டுமே நம்பி களத்தில் இருந்த கார்கள் எல்லாம் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுத்தம் செய்யப் பட்டு வருகின்றன. 
அந்த வகையில் மாருதி ஆம்னியும் நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஆம்னி கார் உற்பத்தியையும் விற்பனையையும் நிறுத்தப் போவதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாருதி தன்னுடைய முதல் காரான மாருதி 800-ன் வெற்றிக்குப் பிறகு 35 ஆண்டுகளுக்கு முன்பு மாருதி ஆம்னி காரை அறிமுகம் செய்தது. 35 ஆண்டு கால உழைப்புக்கு விடை கொடுக்கும் வகையில் ஆம்னி இனி உற்பத்தியில் இருக்காது.
இதுநாள் வரையிலும் ஆம்னியின் விற்பனை சிறப்பாகவே உள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனாலும், பாதுகாப்பான பயணத்தைக் கருத்தில் கொண்டு ஆம்னி நிறுத்தப்படுகிறது.
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து வாகனங்களிலும் ஏபிஎஸ், காற்றுப் பைகள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். இந்த தரவேற்றங்களை செய்ய முடியாததால் பழைய கார்களின் உற்பத்தியையும் விற்பனையையும் பல கார் நிறுவனங்கள் நிறுத்த வேண்டியுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,114.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.