Show all

உலக அளவில் பின்புலம் உள்ளவரா சுப்பிரமணியசாமி! இம்ரான்கான் தலைமை அமைச்சர் எல்லாம் கிடையாதாம்

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான்கானை விமர்சனம் செய்துள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி. பாகிஸ்தானின் புதிய தலைமை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இம்ரான்கான் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் அங்கு ஆட்சி செய்வது எல்லாம் ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் மற்றும் ராணுவம்தான். இம்ரான்கான் அங்கு தலைமை அமைச்சர் எல்லாம் கிடையாது, பாகிஸ்தான் அரசின் அலுவலகஉதவியாளர்களில் ஒருவர்தான் என கூறியுள்ளார்.

இந்தியா மட்டுமல்லாமல், உலக அளவில் யாரை வேண்டுமானாலும் திறனாய்வு செய்ய முடிகிற அளவிற்கு சுப்பிரமணியசாமிக்கு இருக்கும் உலகளாவிய பின்புலம்தான் என்ன? என்ன பின்புலம்? யார் அவரை இயக்குகிறார்கள்? என்றெல்லாம், எப்போது யார் அதை வெளிகொணர்வார்கள் என்பதுதான் தெரியவில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,927.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.