Show all

திராவிடக்கட்சியால் வெற்றி வாய்ப்பு பெற்றார்! தமிழகத்திலிருந்து ஒரு தேசியக்கட்சியை முன்னெடுக்க நினைத்த பாரிவேந்தர்

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், புதிய தலைமுறை இதழ், புதிய தலைமுறை தொலைக்காட்சி, வேந்தர் தொலைக்காட்சி மற்றும் எஸ்ஆர்எம் பயணஏற்பாட்டகம் ஆகியவற்றின் நிறுவனரான பாரிவேந்தர்! இந்திய ஜனநாயகக் கட்சி என்றவொரு கட்சியைத் தோற்றுவித்து, தேசிய கட்சியை முன்னெடுத்த ஒரு தமிழனாக உலா வர ஆசைப்பட்டார். பாஜகவில் பொருளையிழந்து திராவிடத்தில் கரைந்து வெற்றியை ஈட்டியிருக்கிறார். 
 

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கலை இளவல் பட்டதாரியான பாரிவேந்தர்! கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், புதிய தலைமுறை இதழ், புதிய தலைமுறை தொலைக்காட்சி, வேந்தர் தொலைக்காட்சி மற்றும் எஸ்ஆர்எம் பயணஏற்பாட்டகம் ஆகியவற்றின் நிறுவனரானார். பாஜகவின் சுதேசியத்தால் கவரப்பட்டு, சுதேசியம் என்றால், இந்திய மொழிகள், இந்திய முதலாளிகள், இந்திய இறையியல் என்று முன்னெடுக்கும் தானே என்று கருதி, பாஜகவோடு பிடிமானத்தோடு இருந்தார். இந்தியாவில் ஹிந்து, ஹிந்துத்துவா, வடஇந்திய கார்ப்பரேட்டுகள் என்றவாறு இயங்குவதால் தமிழகம் பாஜகவை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதால், கல்வி, தொழில், ஊடகவியலில் சாதித்த அவரால் அரசியலில் பாஜகவை நம்பி தமிழகத்தில் அணுவும் சாதிக்க முடியவில்லை. 

தமிழகத்தில் பாஜகவில் குப்பை கொட்டுகிறவர்கள் பொருளாதாரத்திற்காக இருக்கிற காரணத்தால் அவர்கள் பிழைப்பு ஓடி விடுகிறது. ஆனால் நம்ம பாரிவேந்தர் கல்வி, தொழில், ஊடகவியல் வெற்றிகளோடு பொருளையும் வைத்து பாஜக மூலம் தமிழகத்தில் அரசியல் வெற்றியை ஈட்டமுடிய வில்லை. 

தன்னைப் போலவே கல்வித் தந்தைகளாக இருக்கும் ஜெகத்ரட்சகன், ஏ.சி.சண்முகம், விஸ்வநாதன் ஆகியோர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாகி டெல்லி சென்று வந்துவிட்டனர். ஆனால், தனக்கு அந்த வாய்ப்பு அமையவில்லையே என்ற கவலை அவருக்கு இருந்தது. இதற்காக எவ்வளவு தாராளமாக இருந்தபோதும் வெற்றி வாய்ப்பு தள்ளிப் போனது. 

இந்த நிலையில்தான் பாரிவேந்தர், கமல் கட்சிக்கு போனார், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அப்படியே ஒரு பெரிய வளைவு போட்டு திடுதிப்பென ஸ்டாலினை சந்தித்து கூட்டணியில் இணைந்தார். உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடவும் ஒப்புக் கொண்டார். பாரிவேந்தருக்குப் பரிச்சயமான பெரம்பலூர் தொகுதியும் கிடைக்கப் பெற்றது. பாரிவேந்தர் வெற்றியும் பெற்று பாராளுமன்றம் செல்லவிருக்கிறார். பாஜகவைப் பற்றி நன்கு தெரிந்தவர். தமிழக கல்விக்காக போராடி கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீட்டெடுப்பார்; நீட்டை ஒழித்துக் கட்டுவார் என்று நம்புவோமாக.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,162.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.