வட இந்திய முதலாளிகள் பாஜகவின் வெற்றியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஒரு எரிவாயு பங்க் உரிமையாளர் நேற்று முழுவதும் தானிகளுக்கு எரிவாயுவை இலவசமாக வழங்கி பாஜகவின் வெற்றியைக் கொண்டாடினார். 10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின் 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் வட இந்தியர்கள் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறச் செய்துள்ளனர். மீண்டும் தலைமை அமைச்சராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்குப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர். நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாஜக தலைமை அலுவலகங்களிலும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் மோடியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நேற்று ஒரு நாள் மட்டும் அனைத்து தானிகளுக்கும் இலவசமாக எரிவாயு வழங்கப்படும் என அறிவிக்க நிறைய தானி ஓட்டுனர்கள் பயன்படுத்திக் கொண்டனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,162.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



