தேர்தல் பரப்புரை நேரத்தில், செந்தில் பாலாஜியை வைப்புத் தொகை இழக்க செய்வேன், இல்லை என்றால் தனது பதவியை விட்டுவிலகுவேன் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். செந்தில் பாலாஜி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவிவிலகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேர்தலில் தான் வெற்றி அறிவிக்கப் பட்டதை யடுத்து முதல் வேலையாக, (மோடி முதல் வேலையாக சவுக்கிதார் அடைமொழியைத் துறந்தார்.) நம்ம செந்தில் பாலாஜி என்னடான்னா... நான் வெற்றி பெற்று விட்டேன் என்னிடம் அறைகூவல் விட்டது போல எப்ப பதவி விலகப் போறீங்க! என்று, போக்குவரத்துத் துறை அமைச்சரைப் பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டன. இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி வெற்றி பெற்றார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'என்னை வைப்புத் தொகை இழக்க செய்வேன், இல்லை என்றால் தனது பதவியை துறப்பேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னாரே, (மோடி முதல் வேலையாக சவுக்கிதார் அடைமொழியைத் துறந்தது போல) எப்போது தனது பதவியைத் துறப்பார்.' என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் பரப்புரை நேரத்தில், செந்தில் பாலாஜியை வைப்புத் தொகை இழக்க செய்வேன், இல்லை என்றால் தனது பதவியை துறப்பேன் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,162.
பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்கு எண்ணும் பணி நேற்று காலை 8 மணியிலிருந்து தொடங்கியது. இதில் வாக்குகள் எண்ணப்பட்டு, திமுக 38 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



