Show all

அமைச்சர் ஜெயகுமாரின் நேர்மையும், நையாண்டியும், புளுகு மூட்டையும்! முறையே சூர்யா, கமல், திமுக குறித்து.

மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் பேசும் போது தேசிய கல்வி கொள்கை குறித்து, நடிகர் சூர்யா கருத்து கூறுவதற்கு, மக்களாட்சி தத்துவ அடிப்படையில் அவருக்கு உரிமை உள்ளது; அது தவறு இல்லை. என்றார்

04,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேசிய கல்வி கொள்கை குறித்து, நடிகர் சூர்யா கருத்து கூறுவதற்கு, மக்களாட்சி தத்துவ அடிப்படையில் அவருக்கு உரிமை உள்ளது; அது தவறு இல்லை. என்று தனது நேர்மையை வெளிப்படுத்தியுள்ளார் மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார்.

நடிகர் கமல், பிக்பாஸ் நிகழ்ச்சியில், வேலையாக இருப்பதால், வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில், அவரது கட்சி போட்டியிடவில்லை, என, மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் கமல் மீதான தனது நையாண்டியை வெளிப்படுத்தியுள்ளார். 

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் செயல்படும் நாங்கள், ஹிந்தியை, எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம். எங்கள் கொள்கைகளில், உறுதியாக உள்ளோம். திமுகவை போல், டில்லிக்கு பாத பூசை செய்து, நாங்கள் பதவிகளை பெறவில்லை. என்று வழக்கமான புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டு பேச்சை நிறைவு செய்தார் மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார்;  ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் .

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,219.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.