Show all

யாராலோ பட்டியலிடப்பட்ட இணைய உலாவா, இந்தப் பட்டியல்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பெறும் சம்பளமா?

பிக்பாஸ் போட்டியாளர்களில் யார் யாருக்கு என்ன சம்பளம் என்று ஒரு பட்டியல் வெளியிடப் பட்டு இணையத்தில் தீயாகி வருகிறது. யாராலோ பட்டியலிடப்பட்ட இணைய உலாவா, இந்தப் பட்டியல்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பெறும் சம்பளமா? என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.

05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இயக்குனர் சேரனுக்கு அதிகப்பட்சமாக 50 லட்சம் ரூபாய் வழங்கபட்டுள்ளதாக இந்தப் பட்டியல் தெரிவிக்கிறது.  
 
அபிராமி, மதுமிதா, ரேஷ்மா, சாக்சி ஆகியோருக்கு நாள் ஒன்றுக்கு 25,000 ரூபாய் சம்பளமாக தரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மோகன் வைத்யா, சாண்டி, சரவணன் ஆகியோர்க்கு நாள் ஒன்றுக்கு 35,000 ரூபாய் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

மீரா மிதுன், ஷெரின் இருவருக்கும் நாள் ஒன்றுக்கு 15,000 ரூபாய் சம்பளமாக தரப்படுவதாக கூறப்படுகிறது. முகன் ராவ். தர்ஷன் மற்றும் லாஸ்லியாவிற்கு தலா 5 லட்சம் ரூபாய் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,220.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.