Show all

மாற்று கண்டுபிடிப்பு! காவிரி வடிகால் மீட்க; கடல் பகுதியில் மீத்தேன்; தமிழக மாணவர்கள் படைக்கும் புதிய வரலாறு

காவிரி வடிகால் பகுதிகளில் வேளாண்மையை அழித்து விட்டு மீத்தேன் எடுப்போம் என்று நடுவண் மோடி அரசு சூளுரைத்து கிளம்பியிருக்கும் நிலையில், தமிழகத்தின் மாணவர்கள் ஒன்றுக்கு மூன்றாக தருகிறோம் காவிரியை விட்டு விடுங்கள் என்பதாக இந்தியக் கடல் பகுதயில்  மீத்தேன் இருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர்.

04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காவிரி வடிகால் பகுதியில் மீத்தேன் எடுக்கிறேன் என்று துடித்துக் கொண்டிருக்கும் நடுவண் அரசுக்கு, தமிழக மாணவர்கள் மாற்று ஏற்பாட்டைக் கண்டுபிடித்துக் கொடுத்து காவிரி வடிகால் பகுதியை மீட்க விருக்கிறார்கள். 

இந்தியக் கடற்பகுதியில், 1.90 லட்சம் கோடி கன அடி அளவுக்கு, மீத்தேன் எரிவாயு இருப்பதை, சென்னை, இந்தியத் தொழில் நுட்பக் கழகம் கண்டுபிடித்துள்ளது. இது, தற்போது இந்தியாவில் உள்ள மீத்தேன் வாயுவின் அளவை விட, மூன்று மடங்கு அதிகம் என்று தெரிய வருகிறது.

சென்னை, இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தின் கடல் பொறியியல் மாணவர்கள், மற்றும் பெட்ரோலியம் பொறியியல் துறை பேராசிரியர், ஆகியோரது குழு, இந்திய கடற்பகுதிகளில், பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வில், இந்தியாவின் பொருளாதார ரீதியான கடல் எல்லைக்குள், ஆழ் கடலில், வாயு படிமங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது. இந்தப் படிமங்களை அளவிட்டதில், 1.90 லட்சம் கோடி கன அடி மீத்தேன், அவற்றில் எடுக்க முடியும் என, ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

இது, தற்போது, இந்தியாவில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள, மீத்தேன் அளவை விட, மூன்று மடங்கு அதிகம் என, சென்னை, இந்தியத் தொழில் நுட்பக் கழகம் அறிவித்துள்ளது. வெப்ப அழுத்தம், கடலுக்கடியில் படிமங்களின் மீது அழுத்தம் கொடுப்பது, வேதிப்பொருட்களை புகுத்தி எடுப்பது, கார்பன் டை ஆக்சைடு மற்றும் பாலிமர் பயன்படுத்தியும், மீத்தேன் வாயுவை எடுக்கலாம் என, ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

நடுவண் அரசு இந்த ஆய்வு முடிவை செயல் படுத்த முனையுமானால், காவிரி வடிகால் பகுதி வேளாண்மைக்கு விடுதலை கிடைத்து விடும். இந்த சரக்கு-சேவை வரி, நீட், மின்எந்திரங்களில் வாக்கு பதிவு ஆகியவற்றுக்கும் ஏதாவது மாற்று கண்டுபிடித்து விட்டால் தமிழகத்திற்கு நடுவண் பாஜக அரசின் தொல்லை முற்றாக ஒழிந்து விடும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,188.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.