நான்கு மாடுகளும் சிங்கமும் கதையை நேரலையில் நிகழ்த்திக் காட்ட கிளம்பியிருக்கிறார் நம்ம மோடி. கதையில் என்னவோ மாடுகள் மடிந்து போனாலும் மாநில நலன் விரும்பும் நான்கு தலைவர்களின் விழிப்புணர்வு இந்தியாவைக் காப்பாற்றும். 04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரே தேசம் ஒரே தேர்தலாம்; இதில் பாதிப்புகுள்ளாகப் போகிற மாநிலத்தலைவர்களையும் கலந்து கொள்ள வைக்கும் மோடியின் தந்திரம் நான்கு தலைவர்களால் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. ஒரே தேசம், ஒரே தேர்தல், குறித்து ஆலோசிப்பதற்கு, தில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் மோடி அழைப்பு விடுத்திருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தெரிவித்துள்ளனர். மம்தா பானர்ஜி, இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற விவகாரம் குறித்து குறுகிய காலத்தில் ஆலோசனை நடத்துவதால், அந்த விவகாரம் தொடர்பாக எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. இதுகுறித்து அரசியலமைப்பு நிபுணர்கள், தேர்தல் நிபுணர்கள், அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட வேண்டும். அப்படியில்லாமல், உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரித்து, அதை அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பி வைத்து, ஆலோசனைகளை பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். இதுபோல் செயல்பட்டால், இந்த விவகாரம் தொடர்பாக தகுந்த ஆலோசனைகளை திரிணமூல் காங்கிரஸ் அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,188.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



