சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. 16,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்த கட்சி எவ்வளவு இடங்களைப் பிடிக்கும் என்று சத்தியம் தொலைக்காட்சி கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுக்க தொகுதி வாரியாக கணக்கெடுப்பு நிகழ்த்தி இந்தக் கருத்துக்கணிப்பை பட்டியல் இட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பின்படி திமுக 112 இடங்களில் வெல்லும், அதிமுக 52 இடங்களில் வெற்றிபெறும், 70 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும். இதில் 70 இழுபறி தொகுதிகளில் 38 திமுக சாதகமாக உள்ளது, 29 அதிமுகவுக்கு சாதகமாக உள்ளது என்று சத்தியம் தொலைக்காட்சி கூறியுள்ளது. தமிழகத்தின் தெற்கு மண்டலத்தில் திமுக மிகவும் வலிமையாக இருக்கிறது. எப்போதும் போல தெற்கு மண்டலத்தில் இந்தமுறையும் திமுகவே வெற்றிபெறும். தெற்கு மண்டலத்தில் திமுக 31 இடங்களில் வெற்றிபெறும். அதிமுக 9 இடங்களில் வெற்றிபெறும். 18 இழுபறி நீடிக்கும். எப்போதும் கொங்கு மண்டலத்தில் வலுவாக இருக்கும் அதிமுக இந்த முறை கொங்கில் சரிவை சந்தித்து இருக்கிறது. கொங்கு மண்டலம்: திமுக 28 இடங்களில் வெற்றிபெறும். அதிமுக 16 இடங்களில் வெற்றிபெறும். 17 இழுபறி நீடிக்கும். கழிமுக மண்டலத்தில் இந்த முறையும் திமுக அதிக இடங்களை வெற்றிபெற உள்ளது. திமுக 22 இடங்களில் வெற்றிபெறும். அதிமுக 8 இடங்களில் வெற்றிபெறும். 7 இழுபறி நீடிக்கும். வடக்கு மண்டலத்தைப் பொறுத்தவரை திமுக 23 இடங்களில் வெற்றிபெறும். அதிமுக 17 இடங்களில் வெற்றிபெறும். 22 இழுபறி நீடிக்கும். சென்னை மண்டல்த்தில்; திமுக 8 இடங்களில் வெற்றிபெறும். அதிமுக 2 இடங்களில் வெற்றிபெறும். 6 இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.