Show all

சல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழகம் வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்!

தமிழகத்தின் பொங்கல் திருவிழா சமயத்தில், சல்லிக்கட்டு போட்டியினைக் காண ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அலங்காநல்லூர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவின் போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெறும். அதில் உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் சல்லிக்கட்டு போட்டியும் ஒன்று. இப்போட்டியை நேரில் காண தலைமைஅமைச்சர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர், பொங்கல் திருவிழாவின் போது தமிழகம் வர உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்மூலம் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் சல்லிக்கட்டு, மேலும் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் தலைமைஅமைச்சர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்தித்து கலந்துரையாடியது உலகம் முழுவதும் கவனத்தை பெற்ற நிலையில், ரஷ்ய அதிபர் புடின் தமிழகம் வர இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,318.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.