Show all

பாரதிய ஜனதா கட்சிக்காரர் கல்யாணராமன் கைது! இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகளை இழிவுபடுத்தியதான புகாரில்

வட இந்தியா போலவெல்லாம், தமிழ்நாட்டில் மதப்பாகுபாட்டு நடவடிக்கைகளை, கலவரங்ளைக் காண்பது மிக மிக அரிது. ஆனால் அண்மைக்காலமாக சிறு எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட சில மத அமைப்புகள் தங்களுக்குள் கலவரங்களை ஏற்படுத்திக் கொண்டு காவல்துறை நடவடிக்கைகளுக்கு உள்ளாவதைப் பெருமை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
 
20,தை,தமிழ்த்தொடராண்டு-5122: முஸ்லிம் மதத்தின் இறைத் தூதர் என முகமதியர்களால் போற்றப்படும் நபிகள் நாயகம் குறித்து இழிவான கருத்தைப் பதிவு செய்து மதக் கலவரத்தைத் தூண்ட முயன்றதாக பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சிக்காரர் கல்யாணராமன் இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகளை இழிவுபடுத்தியதாகப் புகார் எழுந்தது. இதற்கு ஆதாரமாக காணொளிகளும் வெளியாகின. 

இதன் காரணமாக இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயத்தில் பாரதிய ஜனதா கூட்டத்தில் கல்வீச்சு நடைபெற்றது.

இந்த நிலையில் நபிகளை இழிவுபடுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் கல்யாணராமன் நேற்றிரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் கல்வீச்சில் ஈடுபட்டதாக அசரப் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.