தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் ஆணையின்படி 708 ஆண்டுகளுக்கு முன்பு போசள நாட்டை ஆண்டு வந்த மூன்றாம் வீர வல்லாளன் மீது படையெடுத்தான் மாலிக்கபூர். தலைநகரான அலபீடுவை முற்றுகையிட்டான். ஆனால் வீரவல்லாளன் மாலிக்கபூரின் பெரும்படைகளுக்கு அஞ்சி போரிடாது, மாலிக் கபூருடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி மாளவ அரசின் கருவூலத்தில் இருந்த அனைத்து செல்வங்களும் மாலிக்கபூர் கைப்பற்றினார். மேலும் போசளநாடு, தில்லி சுல்தானகத்திற்கு அடங்கி, ஆண்டு தோறும் பெருந்தொகை கப்பம் செலுத்த வேண்டும் என்று உடன்படிக்கை ஏற்பட்டது. மாலிக் கபூர் அத்துடன் நில்லாது அந்நாட்டில் உள்ள அனைத்து சிவனிய, மாலிய, சமண மற்றும் பௌத்த கோயில்களை இடித்துத் தள்ள தனது படையினர்களுக்கு கட்டளையிட்டார். மதுரை அரசு எவ்வித உடன்படிக்கை இன்றி மாலிக் கபூரின் காலடியில் வீழ்ந்தது. வழக்கம் போல், அந்நாட்டின் அரசு கருவூலத்தில் இருந்த அனைத்து செல்வங்களை கவர்ந்து சென்றார். பின்னர் தமிழ்நாட்டில் மாலிக்கபூரை எதிர்ப்பார் யாரும் இல்லாதபடியால், தனது பெரும் படைவீரர்களை மட்டும் அனுப்பி, சிதம்பரம்: நடராசர் கோயில், திருவரங்கம்: அரங்கநாதர் கோயில், மற்றும் மதுரை: மீனாட்சி அம்மன் கோயில்களில் உள்ள கடவுள் சிலைகளை இடித்துத் தள்ளி, கோயில்களின் கருவூலங்களில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், காசுகள் கொள்ளை அடிக்கப்பட்டன. தேவகிரி, வாரங்கல், துவார சமுத்திரம் (அலபீடு), காஞ்சிபுரம், சிதம்பரம், திருவரங்கம் மற்றும் மதுரையில் கொள்ளையடித்த கணக்கில் அடங்காத செல்வங்களை நூற்றுக்கணக்கான யானைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் மீது ஏற்றி, தான் வென்ற நாடுகளின் குதிரைகள் மற்றும் யானைகளையும் கவர்ந்து, தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் காலடியில் சேர்த்தார். மாலிக்கபூரின் வெற்றிகளையும், போரில் கொள்ளையடித்த பெருஞ்செல்வங்களையும், கோஹினூர் வைரத்தையும் கண்டு பாராட்டி, சுல்தான் அலாவுதீன் கில்சி மாலிக் கபூரை தில்லி சுல்தானகத்தின் தலைமைப் படைத்தலைவர் என்ற பதவி வழங்கி பாராட்டினார். 10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக 13 தொகுதிகளில் வென்றிருக்கிறது. அதிமுக ஒன்பது தொகுதிகளைத் தக்க வைத்து ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சியில் வென்றிருக்கிறது. தற்போது, அதிமுகவிற்கு சட்டப் பேரவைத் தலைவரைச் சேர்த்து, தமிழக சட்டமன்றத்தில், 114 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவிற்கு, 88 கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு, எட்டு முஸ்லிம் லீக்கிற்கு, ஒன்று என, 97 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக அணிக்கு உள்ளனர். தினகரன், சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றால், திமுக ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு இருந்தது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் அறந்தாங்கி - ரத்தினசபாபதி, விருத்தாசலம் - கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி - பிரபு ஆகியோர், தற்போது, தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர். அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர், அதிமுகவிற்கு எதிராக உள்ளனர். அவர்களை தவிர்த்து, அதிமுக பெரும்பான்மை பெற, ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலை இருந்தது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதிமுக ஒன்பது இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தினகரன் ஆதரவு, சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும், ஆட்சிக்கு எதிரான மனநிலையை மாற்றிக் கொள்ளவும், அவர்களை தகுதி நீக்கம் செய்யும் முடிவை, அதிமுக கைவிடவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. நாங்குநேரி தொகுதி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக, அவர் தன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக அந்தத் தொகுதி காலியாவதால், விரைவில், இடைத்தேர்தல் நடத்தப்படும். காங்கிரஸ் கட்சி, ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழப்பதால், அதன் பலம், ஏழாக குறையும்; திமுகவின் கூட்டணியின் பலமும் குறையும். தமிழகத்தில்- பாஜகவின் நீட், தொடக்கக்கல்வியில் ஹிந்தி, கல்வியை நடுவண் இடைநிலைக் கல்வி வாரியமயமாக்கல், தொடர்வண்டித் துறையை வடவர் மயமாக்கல், கழிமுக மாவட்டங்களை மீத்தேன் மயமாக்கல், மீண்டும் ஸ்டெர்லைட் திறப்பு முயற்சி, வரி உரிமை நடுவண் அரசில், உயர் அழுத்த மின்சாரம், அணுமின்சாரம் நடுவண் அரசில் இப்படி பலவாறான வடக்கின் ஆதிக்கத்தை தமிழர் மீது திணிக்கும் முயற்சிகளுக்கு, எடப்பாடி- பன்னீர் குடும்ப நலனுக்காக வழியமைத்துத் தருவதும், திமுக அதைத் தடுத்து தமிழகத்தை காக்க வேண்டிய நிலையில், திமுக மீண்டும் திமுக தொடக்க காலத்து நடைமுறையை கையில் எடுக்க வேண்டிய கடமையாற்றுதலுக்கு உட்படுத்தப் படுகிறது. மோடியிடமிருந்து தமிழக வாழ்வாதாரத்தை காக்கும் பொறுப்பை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க திமுகவிற்கு வழங்கியிருக்கின்றார்கள் தமிழ்மக்கள்! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,162.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



